வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

ஏழரை சனி, சண்டியாகம் செய்ய போகும் சூர்யா-ஜோதிகா.. என்னப்பா இது குறளி வித்தையா இருக்கு!

Suriya: கடந்த சில வாரங்களாக அதிகப்படியான விமர்சனங்களை சந்தித்து வருகிறார் நடிகர் சூர்யா. கங்குவா படம் நல்லா இல்லை என ஆரம்பித்து அடுத்தடுத்து அவர் மீது நிறைய விமர்சனங்கள் வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

போதாத குறைக்கு விமர்சனம் சொல்லுகிறேன் என்ற பெயரில் ஜோதிகா வெளியிட்ட அறிக்கை இன்னும் இந்த விஷயத்தில் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல் ஆகிவிட்டது. நடிகர் சூர்யாவை பொருத்தவரைக்கும் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு கடந்த மூன்று ஆண்டுகளாக தியேட்டர் ரிலீஸ் எதுவும் இல்லை.

சண்டியாகம் செய்ய போகும் சூர்யா-ஜோதிகா

வெளியான கங்குவா படம் மொத்தமாய் சொதப்பிவிட்டது. இந்த நிலையில் பிரபல சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய பேட்டியில் சூர்யா ஜோதிகா பற்றி ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார்.

அதாவது சூர்யாவுக்கு ஏழரை சனி ஆரம்பித்திருப்பதாகவும் அதனால் தான் தொடர் தோல்வி என்று பேசி இருக்கிறார். இதற்காக சூர்யா மற்றும் ஜோதிகா சண்டியாகம் நடத்த இருக்கிறார்களாம். இந்த யாகம் சென்னையில் நடக்கிறதா அல்லது மும்பையில் நடக்கிறதா என்பதுதான் தெரியவில்லை எனவும் சொல்லி இருக்கிறார்.

சண்டியாகம் தேவியை வழிபடும் முறை இந்து சடங்காகும். இந்த யாகத்தை செய்பவர்களுக்கு எதிரி என்று ஒருவர் கூட இருக்க மாட்டார்களாம். மேலும் சமூகத்தில் பொருளாதாரம் மற்றும் அந்தஸ்து நிலையும் உயருமாம்.

இந்த யாகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மந்திரங்கள் ஓதப்பட்டு 10 வயதிற்கு உட்பட்ட பெண் குழந்தை பங்கேற்க வைத்து புத்தாடைகள் கொடுக்கப்படும். இப்படி ஒரு யாகத்தை தான் சூர்யா மற்றும் ஜோதிகா செய்ய இருக்கிறார்கள்.

கங்குவா படம் ரிலீஸ் ஆன ஒரு சில நாட்களிலேயே சூர்யா நரசிம்மர் கோவிலுக்கு சென்று வந்தது எல்லோருக்கும் தெரியும். அதை தொடர்ந்து சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் இணைந்து கர்நாடகாவில் உள்ள மூகாம்பிகை கோவிலுக்கு சென்றார்கள். இந்த கோவிலின் பலனே இழந்ததை மீட்டுக் கொடுப்பது ஆகும். மேலும் ஜோதிகா மட்டும் திருப்பதி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வந்தார்.

Trending News