Suriya: நேற்று வணங்கான் படத்தின் இசை வெளியீடு விழா நடந்தது. பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள இப்படம் ஜனவரி 10ம் தேதி வெளியாக இருக்கிறது.
அதே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விடாமுயற்சியும் வருவதால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் சூர்யா சிவக்குமார் கலந்து கொண்டது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
ஏனென்றால் இப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது சூர்யா தான். பாதி சூட்டிங் முடிந்த நிலையில் சிறு மனகசப்பின் காரணமாக இந்த கூட்டணி பிரிந்தது.
பிரச்சனையை மறந்து இணைந்த கைகள்
அந்த சமயத்தில் பாலா சூர்யாவை எந்த அளவுக்கு கொடுமை செய்தார் என பல செய்திகள் வெளியானது. ஆனால் இரு தரப்பும் இந்த சர்ச்சைக்கு விளக்கம் கொடுக்கவில்லை.
அவை அனைத்துக்கும் சேர்த்து தற்போது ஒரு முடிவு கிடைத்துள்ளது. நேற்றைய நிகழ்ச்சியில் சூர்யா பாலா இருவரும் கைகளை கோர்த்துக்கொண்டு மேடை ஏறினார்கள்.
இதுவே அவர்களுக்குள் இருக்கும் பாசத்தை பறைசாற்றியது. அதேபோல் சூர்யா பேசும் போது நந்தா படம் இல்லை என்றால் காக்க காக்க வாரணம் ஆயிரம் என எதுவும் கிடையாது.
பாலா தான் தனக்கு ஒரு வாழ்க்கை கொடுத்ததாக வெளிப்படையாக பேசினார். இவ்வளவு உயரத்திற்கு வந்த பிறகும் கூட அவர் பழசை மறக்கவில்லை.
நன்றி மறக்காமல் அவர் பேசிய பேச்சும் மனக்கசப்பை மறந்து விழாவுக்கு வந்ததும் பாராட்டப்பட வேண்டியது தான். அதேபோல் இந்த நிகழ்ச்சியில் பாலா ரொம்பவும் உணர்ச்சிவசப்பட்டு நெகிழ்ச்சியுடன் இருந்தார்.