வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

இந்திய அளவில் சூர்யாவை டிரண்டாக்கிய ரசிகர்கள்.. வைரல் போஸ்டர்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா டிவிட்டரில் இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

டி.இமான் இசையமைத்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை முடித்த பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது.

கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகர் சூர்யா பிறந்தநாள் வரும் 23ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் காமன் டிபி உருவாக்கி இப்போதே பிறந்தநாளை கொண்டாட தொடங்கிவிட்டனர்.

இந்த காமன் டிபி வெளியிட்ட சில மணி நேரங்களிலேயே சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி உள்ளது. இதனால் ட்விட்டர் பக்கத்தில் #SuriyaBdayCDPCarnival என்ற ஹாஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி முதல் இடத்தை பிடித்திருக்கிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

suriya-hbd
suriya-hbd

Trending News