திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சரத்குமார் போல் காசுக்காக சூர்யா செய்த காரியம்.. கங்குவா வீடியோவால் வெடிக்கும் சர்ச்சை

Actor Suriya: சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். மிகப் பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு வரும் இந்த படம் 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கங்குவா படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டு இருந்தது.

இப்போது யூடியூபில் இல் 42 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இந்த வீடியோ ட்ரெண்டிங்கில் இருக்கிறது. இதைப் பார்த்த பெரிய ஹீரோக்கள் எல்லோரும் பயந்து போய் இருக்கிறார்கள். ஏனென்றால் இப்படி கங்குவா படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு கிடைப்பத்தால் நம்ம படம் அங்கு எடுபடுமா என்றால் பயம் தான் எல்லோருக்கும்.

Also Read : ஏழாம் அறிவா, காஷ்மோராவா.? கங்குவா கெட்டப்புக்காக ரிஸ்க் எடுத்த சூர்யா.. ஊறுகாய் போல் பயன்படுத்திய சிவா

ஆனால் சூரியா தனது பெயரை கெடுத்துக் கொள்ளும்படியாக ஒரு விஷயம் செய்திருக்கிறார். அதாவது சரத்குமார் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுத்து பட்டையை கிளப்பி வருகிறார். ஆனாலும் அவர் மீது ரசிகர்களுக்கு இப்போதும் ஒரு அதிருப்தி இருந்து வருகிறது. காரணம் சூது விளையாட்டை வலியுறுத்தும் படியாக ரம்மி விளம்பரத்தில் நடித்தது தான்.

இதனால் அவருடைய ரசிகர்கள் இதற்கு அடிமையாக வாய்ப்பு இருக்கிறது என பலரும் விமர்சனம் செய்திருந்தார்கள். இப்போது ரம்மியை ஊக்குவிக்கும் விதமாக கங்குவா படத்தின் வீடியோவில் இந்த விளம்பரம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பல்லாயிரக்கணக்கானோர் பார்க்கப்பட்டுள்ள இந்த வீடியோவின் ஆரம்பத்தில் ரம்மி விளம்பரம் வருகிறது.

Also Read : கங்குவா அதுக்கு மட்டுமே டபுள் மடங்கு எகிறிய பட்ஜெட்.. பாதி படத்திற்கே மொத்தத்தையும் காலி செய்த சூர்யா டீம்

கல்வி சார்ந்த பல உதவிகளை சூர்யா செய்து வருகிறார். கிராமத்தில் திக்கு தெரியாமல் இருந்து நன்றாக படித்த பல மாணவர், மாணவியர்கள் இன்று டாக்டர் மற்றும் இன்ஜினியர் போன்ற பதவிகளில் இருப்பதற்கு சூர்யாவும் ஒரு முக்கிய காரணம். இப்படி இருக்கும் சூழலில் ஒரு இளைய சமுதாயத்திற்கு தப்பான வழிமுறையை ரம்மி விளம்பரம் கொடுக்கிறது.

சூர்யா இதைத் தவிர்த்து இருந்தால் கண்டிப்பாக அவருடைய பெயருக்கு எந்த களங்கமும் வந்திருக்காது. ஆனால் இப்போது கங்குவா விளம்பரம் ட்ரெண்ட் ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் சூர்யா இதற்கு எப்படி ஒத்துக் கொண்டார் என்ற விமர்சனமும் எழுந்து வருகிறது. இதுவே கங்குவா படத்தை பாதிக்க கூடும் என்று பலரும் கருத்து சொல்லி வருகிறார்கள்.

Also Read : மொத்த வெறியோடு திரியும் சூர்யா.. 14 ஆம் நூற்றாண்டை அச்சு பிசாராமல் கண் முன் நிறுத்தும் கங்குவா

Trending News