வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

என்ன வச்சு சம்பாதித்த சூர்யா எனக்கு ஒன்னும் பண்ணல.. புலம்பும் நிஜ செங்கேணி

சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உண்மை கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கிய ஜெய்பீம் என்ற திரைப்படம் கடந்த வாரம் அமேசான் தளத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து சூப்பர் ஹிட் படமாக மாறியுள்ளது. மேலும் இந்த படத்தில் ராஜாக்கண்ணு செங்கேணி என்ற இருளர் தம்பதிகளின் உண்மை வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் தயாரானது.

இந்த ஜெய் பீம் படம் வெளியானதிலிருந்து ஏகப்பட்ட சர்ச்சைகளையும் பிரச்சனைகளையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது. அரசியல் தலைவர்கள் பலரும் இந்த படத்தை விமர்சனம் செய்து வரும் நிலையில் சூர்யா அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அவ்வப்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அந்த படத்தின் உண்மை கதாநாயகியான செங்கேணி என்பவரை நேரில் பேட்டி எடுத்தபோது ஏகப்பட்ட உண்மைகளும் அதிர்ச்சியிலும் தெரியவந்துள்ளது. ராஜாக்கண்ணு மற்றும் செங்கேணி இருவரின் வாழ்க்கையை வைத்து படமாக்கிய சூர்யா தரப்பு ஆரம்பத்தில் அவர்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை என்ற தகவலை ஓப்பனாக தெரிவித்துள்ளார் செங்கேணி.

தங்களை வைத்து கோடி கோடியாக பணம் சம்பாதித்த சூர்யா இதுவரை பத்து பைசா கூட தரவில்லை என கூறியுள்ளது நம்பலாமா வேண்டாமா எனும் அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்கி உள்ளது. இந்த படம் வெளியான பிறகுதான் ராகவா லாரன்ஸ் தானாகவே முன்வந்து செங்கேணி வீடு கட்டி தருவதாக அறிவிப்பை வெளியிட்டார். அதுமட்டுமில்லாமல் நேரிலேயே சென்று அதை உறுதி செய்தார்.

அதன் பிறகுதான் சூர்யா செங்கேணி பெயரில் வங்கி கணக்கு ஒன்றை ஆரம்பித்து அதில் 10 லட்சம் பணம் வருவதாகவும் அவருக்கு பின்னால அவருடைய குடும்பத்தினர் அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் ஒரு அறிக்கை கொடுத்தார்.

இது உண்மையா பொய்யா என்பது பற்றி யோசித்தால் அது உண்மையிலேயே செங்கேணி சொன்னதுதான். இதனை செங்கேணி ஒரு பேட்டியில் வெளிப்படையாக தெரி வித்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை செங்கேணி தானாக சொல்கிறார்களா அல்லது அவர்களது கூட இருக்கும் சிலர் அவரை உசுப்பேற்றி இப்படி சொல்ல வைக்கிறார்களா என்பதும் தெரியவில்லை.

Trending News