இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படம் வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் ஒரு பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது.
சமீபகாலமாகவே சூர்யாவின் படங்கள் ஓடிடியில் தான் வெளியாகி வருகின்றன. ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தியேட்டரில் வெளியாக உள்ள சூர்யா படம் என்றால் அது எதற்கும் துணிந்தவன் படம் தான். மேலும் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி இருப்பதாக கூறப்படுவதால் படம் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.
தமிழில் படம் வெற்றி பெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. ஆனால் மலையாளத்தில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படம் வெளியாகும் அதே சமயத்தில் மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி மற்றும் மோகன் லால் ஆகியோரின் படங்கள் வெளியாவதால் சூர்யாவின் படத்திற்கு வசூல் ரீதியாக சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி மலையாள வசூல் ஜாம்பவான் மம்முட்டி நடிப்பில் ஒரு கேங்கஸ்டர் படமாக உருவாகி உள்ள பீஷ்ம பர்வம் படம் பிப்ரவரி 3 ஆம் தேதி வெளியாக உள்ளது. மேலும் மற்றொரு ஜாம்பவான் மோகன் லால் நடிப்பில் உருவாகியுள்ள ஆரட்டு படம் பிப்ரவரி 10 ஆம் தேதி வெளியாக உள்ளதாம்.
என்னதான் விஜய் சூர்யா போன்ற தமிழ் நடிகர்களின் படங்கள் கேரளாவில் வெளியாகி அதிக வசூல் பெற்றிருந்தாலும், தற்போது ஒரே சமயத்தில் மலையாள சூப்பர் ஸ்டார்களின் படமும் வெளியாவதால் உள்ளூர் வாசிகள் அவர்களின் நடிகர்களுக்கு தானே ஆதரவளிப்பார்கள். இருப்பினும் என்ன நிலவரம் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.