ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

எதற்கும் துணிந்தவன் இதுக்கு பயந்துதான் ஆக வேண்டும்.. சூர்யா பட ரிலீஸ்க்கு வேலி போட்ட படம்

கொரோனா நோய் தொற்றால் போடப்பட்டிருந்த ஊரடங்கு சமயத்தில் திரை உலகம் பயங்கர நெருக்கடியை சந்தித்து விட்டது. படப்பிடிப்பு நடத்த முடியாமல், எடுத்த படத்தை வெளியிட முடியாமல் பல பிரச்சனைகளை திரையுலகம் சந்தித்துள்ளது.

தற்போது கொரோனா நோய் தொற்று குறைந்துள்ளதால், 50% பார்வையாளர்களுடன் திரையரங்குகளை திறப்பதற்கு அரசு அனுமதி அளித்து படங்களும் வெளியாகி ஓடி கெண்டிருக்கின்றன. இதுநாள் வரை வெளியாகாமல் இருந்த பல படங்கள் தற்போது தொடர்ச்சியாக வெளியாகி கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி, சென்னை மற்றும் குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது.

இந்நிலையில் இப்படத்தை பொங்கலுக்கு வெளியிட உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. முன்னதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படம்தான் பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் அதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதால், தற்போது எதற்கும் துணிந்தவன் படத்தை வெளியிட உள்ளார்களாம்.

அதுமட்டுமின்றி சூர்யாவிற்கு ஆந்திராவிலும் அதிகளவில் ரசிகர்கள் இருப்பதால் எதற்கும் துணிந்தவன் படத்தை ஆந்திராவிலும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால், அதில் புதிதாக பிரச்சனை ஒன்று உருவாகியுள்ளதாம். அதாவது அந்த சமயத்தில் பிரம்மாண்டமான தெலுங்கு படம் ஒன்றும் வெளியாக உள்ளதாம்.

பிரபல தெலுங்கு இயக்குனர் ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள ஆர்ஆர்ஆர் படம் அடுத்தாண்டு ஜனவரி 7ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனால் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு திரையரங்குகள் கிடைப்பதில் மிகப்பெரிய பிரச்சனை எழுந்துள்ளது.

suriya
suriya

பாகுபலி படத்தின் வெற்றிக்கு பின்னர் ராஜமெளலி இயக்கி உள்ள படம் என்பதால் மூலம் ஒட்டு மொத்த தென்னிந்திய ரசிகர்களும் ஆர்ஆர்ஆர் படத்திற்காக மரண வெயிட்டிங்கில் உள்ளார்கள். எனவே சூர்யா படத்திற்கு இப்படம் மிகப்பெரிய சிக்கலாக இருக்கும் என்பது உறுதியாக தெரிகிறது.

- Advertisement -spot_img

Trending News