சூர்யா நடிப்பில் OTT-தளத்தில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்று சூர்யாவிற்கு பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது என்றே கூறலாம். அந்த அளவிற்கு படத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.
சூரரைப்போற்று படத்திற்கு பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் ஒரு படமும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்திலும் நடித்து வருகிறார். பாண்டிராஜ் சூர்யாவை வைத்து இயக்கவுள்ள படம் இம்மாதத்தில் படப்பிடிப்பு தொடங்குவதாகவும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.
எப்போதுமே சூர்யா தன் உடலை கவனமாக வைத்துக் கொள்வதற்கு முக்கியத்துவம் கொடுப்பார் என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது அவருடைய உடற்பயிற்சியாளர் நிர்மல் நாயர் சூர்யா பற்றி நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் சூர்யாவைப் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். இது ஒரு கடினமான காலமாக இருந்தாலும் அனைவரும் வாழ்க்கையில் வெற்றியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
நீண்டகாலமாக எனக்கு சூர்யாவை தெரியாது என்றும் இந்த கடினமான கால கட்டத்தில் நாங்கள் இருவரும் இணைந்து ஆன்லைனிலேயே உடற்பயிற்சி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆன்லைனில் சூர்யாவுக்கு பயிற்சி அளிப்பது எனக்கு பிடிக்கவில்லை. ஆனால் சூழ்நிலை காரணமாகத்தான் ஆன்லைனில் சூர்யாக்கு பயிற்சி அளிப்பதாகவும். கொரோனா காலகட்டத்திலும் சூர்யாவின் உடற்பயிற்சியின் மீது வைத்திருந்த ஒழுக்கமும் கவனமே எனக்கு ஊக்கம் அளிப்பதாகவும். மேலும் என்னை போன்ற பலருக்கும் சூர்யா முன்மாதிரியாக உள்ளார் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நெகிழ்ச்சியான பதிவை பார்த்து சூர்யா ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றன.