எதற்கும் துணிந்தவன் படத்திற்கு அப்புறம் சூர்யாவிற்கு எந்த படமும் ரிலீஸ் ஆகவில்லை. நடிக்க வந்த பிறகு கிட்டத்தட்ட 3 ஆண்டு காலம் இடைவெளி விடுவது இதுதான் சூர்யாவிற்கு முதல் முறை. கடந்த இரண்டு வருடங்களாக முழு ஒத்துழைப்பும் கங்குவா படத்திற்கு மட்டுமே கொடுத்து வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளில் ஒன்று இரண்டு படங்களில் கெஸ்ட் ரோல் மட்டும் பண்ணியுள்ளார்
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் வரும் காலங்களில் கங்குவா சிவா என்று அவருக்கு பெயர் எடுத்து தரும் என மொத்த பட யூனிட்டும் பேசி வருகிறது. அந்த அளவிற்கு இந்த படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும் என்று நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.
கிட்டத்தட்ட 350 கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தில் பாபி டியோல், ஜெகபதி பாபு போன்ற நடிகர்கள் தங்களது நடிப்பில் மிரட்டி வருகின்றனர். இன்னமும் இந்த படம் 50 முதல் 100 கோடி வரை செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யூ வி கிரியேஷன்ஸ் சேர்ந்து இந்த படத்தை தயாரித்து வருகிறது.
எதற்கும் துணிந்து அடிக்கும் கங்குவா
இந்தப் படத்தின் தியேட்டரிகல் உரிமைகள் மட்டும் கிட்டத்தட்ட 75 கோடிகளுக்கு விலை பேசி உள்ளனர். இவ்வளவு பெரும் தொகை எப்பொழுதும் தமிழ்நாட்டில் ரிலீசாகும் விஜய் மற்றும் அஜித் படத்தின் விலை நிர்ணயம். சூர்யா படத்தில் இதுதான் அதிக விலைக்கு பேசப்பட்டுள்ளது.
இப்பொழுது சூர்யாபடமும் விஜய், அஜித் ரேஞ்சில் விலை நிர்ணயிப்பது மிகவும் ஆச்சரியம் ஆக உள்ளது. கங்குவா படத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். இது 700 கோடிகளுக்கு மேல் வசூல் ஆகும் என்பதில் சிறுத்தை சிவா உறுதியாக இருக்கிறார்.
- Kanguva Review – வேறு உலகத்திற்கு அழைத்துச் செல்லும் கங்குவா
- சூர்யாவின் வலது கை தயாரிப்பில் வெளிவர காத்திருக்கும் 4 பிரம்மாண்ட படங்கள்
- ஓடிடியில் பார்க்க குவியும் அஜித் வெறியர்கள்