Suriya: ரஜினி, கமலுக்கு பிறகு விஜய், அஜித் இருவருக்கும் தான் ஒரே போட்டியாக இருக்கிறது. இவர்களின் ரசிகர்களும் சோசியல் மீடியாவில் ஒருவரை ஒருவர் தாக்கும் விதமாக ட்வீட் போட்டு ரணகளம் செய்து வருகின்றனர்.
இது ஒரு பக்கம் இருக்க சூர்யாவின் ரசிகர்களும் இவர்களுக்கு போட்டியாக அலப்பறை செய்து வருகின்றனர். அதில் சமீப காலமாக சூர்யாவின் போக்கு மாறிவிட்டதாக சினிமா விமர்சகர்கள் அவ்வப்போது கூறி வருகின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் விஜய், அஜித் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற போட்டி தான் என பத்திரிகையாளர் பிஸ்மி தெரிவித்துள்ளார். அதாவது சூர்யாவுக்கு எப்போதுமே சமூகப் பொறுப்பு உண்டு. அதை நாம் பல விஷயங்களில் கண்கூடாக பார்த்து வருகிறோம்.
சூர்யா 44 கிளப்பிய சர்ச்சை
அதேபோல் பல மாணவர்களுக்கு ஒரு நல்ல வழிகாட்டியாகவும் அவர் இருக்கிறார். ஆனால் இப்போது அவர் அதை எல்லாம் மறந்து விட்டு சினிமாவில் தனக்கான ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என சில வேலைகளை செய்வதாக பிஸ்மி தெரிவித்துள்ளார்.
ஏனென்றால் நேற்று சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் அவர் நடிக்கும் சூர்யா 44 பட கிளிம்ஸ் வீடியோ வெளியானது. அதில் அவர் முகம் முழுவதும் ரத்தம் தெறிக்க வாயில் சிகரெட்டும் கையில் துப்பாக்கியுமாக காட்சியளித்தார்.
இப்படித்தான் ரோலக்ஸ் கேரக்டர் இளைஞர்கள் மத்தியில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. எங்கு திரும்பினாலும் அதேபோல் நடித்து ரீல்ஸ் வீடியோக்களாக பதிவிட்டு வந்தனர். அவ்வளவு ஏன் சிறு பிள்ளைகள் கூட அதேபோல் ரீல்ஸ் போட்ட கதையும் நடந்தது.
தற்போது வெளியாகி உள்ள இந்த வீடியோவும் அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. எப்படிப்பட்ட கேரக்டரை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற உரிமை சூர்யாவுக்கு இருக்கிறது.
ஆனால் அவர் சமூக அக்கறை கொண்டவராகவும் இருக்கிறார். அதனால் இனி இதை தவிர்க்க வேண்டும் என பிஸ்மி கேட்டுக் கொண்டுள்ளார். உண்மையில் ரசிகர்கள் இதை கொண்டாடினாலும் அதிக வன்முறை காட்சிகளை டாப் ஹீரோக்கள் தவிர்ப்பது நல்லது.