Suriya: அமீர் பருத்திவீரன் பிரச்சனை சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் இரு தரப்புக்கும் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் வந்தது.
தற்போது இந்த விவகாரம் ஓய்ந்திருந்தாலும் ஒரு கேள்வி மட்டும் அனைவர் மனதிலும் இருக்கிறது. அதாவது மாட்டுப்பொங்கல் அன்று தயாரிப்பாளர் தாணு வாடிவாசல் தொடங்கும் என்று அறிவிப்பு கொடுத்திருந்தார்.
பல வருடங்களாக தாமதமாகி வரும் இப்படம் மீண்டும் உருவாகப் போவதில் சூர்யா ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி தான். ஆனால் இப்படத்தில் அமீர் இருக்கிறாரா இல்லையா என்ற கேள்வி பெரிதாக உள்ளது.
பருத்திவீரன் பட பிரச்சனையில் சூர்யா அமீருடன் நடிக்க மறுத்துவிட்டார். நேரடியாக வெற்றிமாறனிடம் சொல்லாமல் ஞானவேல் ராஜா மூலம் தூது விட்டிருந்தார்.
இரண்டு மணி நேரம் நடந்த மீட்டிங்
ஆனால் வெற்றிமாறன் அமீர் படத்தில் இருப்பதை உறுதி செய்தார். அது மட்டும் இன்றி சூர்யாவை விலக்கிவிட்டு தனுசை கொண்டு வரலாம் என்ற பேச்சு கூட இருந்தது.
ஆனால் தற்போது சூர்யா தான் வாடிவாசலில் நடிக்கிறார் என்பது உறுதியாகி இருக்கிறது. சமீபத்தில் வெற்றிமாறன், தாணு இருவரும் சூர்யா வீட்டில் இரண்டு மணி நேர சந்திப்பை நிகழ்த்தி இருக்கின்றனர்.
அப்போது படம் குறித்த பல சந்தேகங்களும் பேசி தெளிவு செய்யப்பட்டிருக்கிறது. அப்படி என்றால் அமீருடன் இணைவதில் சூர்யா ஆட்சியபனை தெரிவிக்கவில்லை என்பதும் உறுதியாக இருக்கிறது.
இது குறித்து விசாரித்ததில் சூர்யா அடுத்த கட்ட வெற்றியை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். வாடிவாசல் படத்தை விடுவதற்கு அவருக்கு விருப்பம் கிடையாது.
அதனால் அமீருடன் அவர் நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கலாம் என செய்திகள் கசிந்துள்ளது. எது எப்படியோ வாடிவாசல் நிச்சயம் வேற லெவலில் பட்டையை கிளப்பும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.