தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா இதுவரை எத்தனையோ படங்களில் நடித்திருந்தாலும், அவருக்கு மிகப்பெரிய பெயர் பெற்று கொடுத்த படம் என்றால் அது சமீபத்தில் வெளியான சூரரைப்போற்று படம்தான். இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான சூரரைப்போற்று படம் மாபெரும் வெற்றி பெற்றது. தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து மொழிகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அனைத்து மொழி நடிகர்களும் இப்படத்தை பார்த்து நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சுதா கொங்கராவை பாராட்டித் தள்ளினார்கள். இது தவிர இப்படத்தில் சூர்யாவின் நடிப்பு பரவலாக பேசப்பட்டது. மிகச் சிறந்த நடிப்பாகவும் பார்க்கப்பட்டது. மேலும் இப்படத்திற்கு ஒரு சிறந்த அங்கீகாரமும் கிடைத்துள்ளது.
சமீபத்தில் மெல்போர்ன் திரைப்பட விருது விழாவில் சூரரைப் போற்று படத்திற்கு விருது வழங்கி சிறப்பித்துள்ளனர். இப்படத்திற்கு சிறந்த படத்திற்கான விருதும், சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளது. சமீபத்தில் இவ்விருது நடிகர் சூர்யாவின் வீடு தேடி வந்தது. அதை அவரே அவரது சமூக வலைதளப் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இவர்கள் இருவரது கூட்டணியில் மற்றொரு புதிய படம் ஒன்று உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது சூரரைப்போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கில் இயக்குனர் சுதா கொங்கரா மிகவும் பிசியாக உள்ளாராம். எனவே இப்படத்தை முடித்த பின்னர் புதிய கதை ஒன்றில் நடிகர் சூர்யாவை வைத்து இயக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
![suriya-cinemapettai](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/04/suriya-cinemapettai.jpg)
மேலும் இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையில் இயக்குனர் நலன் குமாரசாமியும் அவரது பங்களிப்பை செலுத்தி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படம் மாபெரும் வெற்றி பெற்ற நிலையில், தற்போது மீண்டும் இவர்கள் இருவரும் கூட்டணி அமைத்துள்ளது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.