வியாழக்கிழமை, பிப்ரவரி 6, 2025

சூர்யா கைவசம் இருக்கும் 8 படங்கள்.. 2025ல் கூரையை பிச்சிகிட்டு கொட்டும் அதிர்ஷ்டம்

Suriya: சூர்யாவுக்கு கடந்த சில வருடங்களாக எதுவும் சரியாக அமையவில்லை. பல வருடங்கள் கழித்து வெளிவந்த கங்குவா கூட காலை வாரியது.

அதிக பொருட்செலவில் கடுமையான உழைப்பை கொடுத்து அவர் எதிர்பார்த்த படம் தான் இது. ஆனால் நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகமான நிலையில் படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.

இருப்பினும் அடுத்தடுத்த படங்களில் அவர் கவனம் செலுத்த தொடங்கிவிட்டார். அதன்படி தற்போது அவர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து வருகிறார்.

அதை அடுத்து இன்னும் ஏழு படங்கள் அவர் கைவசம் இருக்கிறது. அதை வைத்து பார்த்தால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு சூர்யா ரொம்பவும் பிசி தான்.

சூர்யா கைவசம் இருக்கும் 8 படங்கள்

அந்த வகையில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 அமல் மீரட் இயக்கத்தில் சூர்யா 46 படங்கள் அடுத்தடுத்து உருவாக இருக்கிறது.

மேலும் பல வருடங்களாக இழுத்தடித்து வந்த வாடிவாசல் படமும் தொடங்க இருக்கிறது. இதன் அறிவிப்பு மாட்டுப் பொங்கல் அன்று வெளிவந்தது.

இதைத்தொடர்ந்து மலையாள இயக்குனர் பேஸில் ஜோசப் இயக்கத்தில் சூர்யா 44 வெங்கட் அட்டலூரி இயக்கத்தில் சூர்யா 48 ஆகிய படங்களும் கைவசம் உள்ளது.

அது மட்டும் இன்றி லோகேஷ் இயக்கத்தில் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்த ரோலக்ஸ் படமும் இன்னும் சில வருடங்களில் தொடங்கி விடும்.

இப்படியாக அடுத்தடுத்த எட்டு படங்கள் சூர்யா நடிப்பில் வெளிவர இருக்கிறது. அதில் இந்த வருட இறுதிக்குள் கங்குவா 2 வெளிவரும் என தெரிகிறது.

முதல் பாகத்தில் இருந்த தவறுகள் அனைத்தும் திருத்தப்பட்டு இந்த முறை விட்டதை பிடிக்கவும் டீம் முயற்சி செய்து வருகிறது. ஆக மொத்தம் இந்த 2025 சூர்யாவுக்கு அமோகமாகத் தான் இருக்கும்.

Trending News