செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

இந்த அஞ்சு டைரக்டர்ல அஜித்தின் ஆஸ்தான இயக்குனரை லாக் செய்த சூர்யா.. எனக்கு ஏத்த மூளைக்காரன் நீதான்

Surya: சூர்யாவை பொருத்தவரை கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி உடலை வருத்திக் கொண்டு நடிப்பதில் இவரை மிஞ்சுவதற்கு யாரும் இல்லை. அப்படிப்பட்ட இவர் பல கெட்டப்புகளை போட்டு தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இடம் பிடித்திருக்கிறார். அதனால் மறுபடியும் அடுத்த கட்ட லெவலுக்கு போவதற்காக முயற்சி எடுக்கிறார். அதன் வாயிலாக தான் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் புது கெட்டப்புடன் நடித்து வருகிறார்.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்காக பார்க்கிற இயக்குனர்கள் அனைவரிடமும் கதை கேட்டு வருகிறார். அது மட்டுமில்லாமல் தற்போது முன்னணி இயக்குனர்களாக இருக்கும் நெல்சன், கார்த்திக் சுப்புராஜ், அட்லி இவர்களும் சூர்யாவிடம் கதை சொல்லி இருக்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து அஜித்தின் ஆஸ்தான இயக்குனராக இருக்கும் எச் வினோத்திடமும் கதை கேட்டிருக்கிறார்.

அஜித்தின் ஆஸ்தான இயக்குனரை லாக் செய்த சூர்யா

இப்படி கேட்ட கதைகளில் அவருக்கு மிகவும் பிடித்த கதை எச் வினோத் சொல்லிய கதைதான். அதனால் தற்போது இவரை லாக் செய்து இருக்கிறார் சூர்யா. இதற்கிடையில் கடந்த வாரம் கௌதம் மேனனிடம் எனக்காக ஒரு கதையை ரெடி பண்ணுங்கள் என்று சொல்லி இருக்கிறார். அதே மாதிரி இயக்குனர் ஹரியிடமும் உங்கள் இயக்கத்தில் நான் மறுபடியும் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

Also read: நூலிலையில் உயிர் தப்பிய சூர்யா.. கங்குவா படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட காரணம் இதுதான்

அதனால் எனக்காக ஒரு கதையை ரெடி பண்ணுங்கள் என்று கேட்டிருக்கிறார். இப்படி எதற்காக எல்லா இயக்குனர்களையும் பார்த்து படம் பண்ணலாம் என்று சொல்லி வருகிறார் என்பது எதுக்கு என்று தெரியவில்லை.  போதாக்குறைக்கு ஹிந்தி படத்தலையும் நடிக்க இருக்கிறார். ஆக மொத்தத்தில் தற்போது தன்னை பிஸியாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வத்தை காட்டி வருகிறார்.

இல்லையென்றால் முக்கிய இயக்குனர்கள் அனைவரும் மற்ற நடிகர்களிடம் போய் விடக்கூடாது என்ற காரணத்திற்காக கூட இருக்கலாம். அல்லது எல்லா இயக்குனர்களும் என்னைத் தேடி தான் வருகிறார்கள் என்பதை கெத்துடன் காட்டுவதற்காகவும் சூர்யா இப்படி செய்து வருகிறாரா என்பதும் தெரியவில்லை.

இப்போதைக்கு சூர்யாவின் முக்கிய நோக்கமே நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்பதுதான். அதற்கு காரணம் எப்படியாவது விஜய் அஜித்தை விட ஒரு படி மேலே வந்து விட வேண்டும் என்ற ஆசை. என்னதான் இவர் பல படங்களில் நடித்து வித்தியாசமான கெட்டப்பை போட்டாலும் விஜய் அஜித் மாதிரி வர முடியாது என்று சினிமாவில் உள்ள சில பிரபலங்கள் இவரை கிண்டல் பண்ணி வருகிறார்கள்.

Also read: கங்குவாவுக்காக ரிஸ்க் எடுக்கும் சூர்யாவின் 3 மாஸ் லுக்.. ஆறு மாசத்துல 6 பேக், வெயிட் லாஸ்ன்னு மிரட்டிட்டாரு

Trending News