புதன்கிழமை, ஜனவரி 15, 2025

சுதா கொங்கரா படத்தை விட முக்கியமான வேலையில் சூர்யா.. குட்பை போட்ட சிங்கம்

Suriya hosted a party for fans who helped in the Mixam storm: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சூர்யா எந்த ஒரு பிரதி பலனும் பாராது அரசியல் ஆசை கொள்ளாது, சினிமாவின் மூலம் தான் சம்பாதித்த புகழை மட்டும் வைத்துக்கொண்டு பொருளை தமிழ் மக்களின் நலனுக்காக செலவிட்டு வருகிறார்.

ஆம் தற்போது பான் இந்தியா மூவியாக செலக்ட் செய்து நடித்து வரும்  சூர்யாவின் திரைப்பயணம் ஆரம்ப காலங்களில் கேலிக்குரியதாகவும் நகைப்புக்குரியதாகவுமே இருந்தது. தோல்விகளினால் பாடம் கற்றுக் கொண்ட சூர்யா தனது கடின முயற்சியின் மூலம் நடிப்பு, நடனம் இரண்டிலும் அசாத்திய வளர்ச்சி பெற்றார்.  

சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா சரித்திர கதையை பின்புலமாகக் கொண்டு மிரட்டும் தோற்றத்தில் தமிழின வேட்கையுடன் களம் காண வருகிறது. தொடர்ந்து  கர்ணா என்ற பான் இந்தியா மூவியிலும் அடுத்து சூரரைப் போற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் ஜிவி பிரகாஷ் குமாரின் வெற்றி கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ளார் சூர்யா.  இதனால் இத்திரைப்படமும் ரசிகர்களிடையே ஆவலை கூட்டி உள்ளது. 

புறநானூறு என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை அருகில் சூர்யா இல்லாமலேயே வேகமாக நடத்தி வருகிறார் இயக்குனர் சுதா கொங்கரா. சூர்யா படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததற்கு முழுமுதற் காரணம் அவரது ரசிகர்களே ஆவார்கள்.

Also read:வெற்றிமாறன், சுதா கொங்காராவை வெயிட்டிங் லிஸ்டில் வைத்த சூர்யா.. வருஷகணக்கா சொல்லும் காரணம்

“குட்டி சுவத்த எட்டிப் பார்த்தா உசுர கொடுக்க நூறு பேரு” என்பது போல் சூர்யாவிற்கும் ரசிகர்களுக்கும் இடையே அப்படி ஒரு பாண்டிங் நிலவி வருகிறது. இது காசால சேர்ந்த கூட்டம் இல்ல! தானா சேர்ந்த கூட்டம் என சூர்யாவின் கட்டளை ஒவ்வொன்றையும் வேகமாக நிறைவேற்றி வருகின்றனர் அவரது ரசிகர்கள். ரசிகர்களின் பேராதரவிற்கு நன்றி கூறும் வகையில் சூர்யா சில தரமான செயல்களை செய்து வருகிறார். 

சென்னையை புரட்டி எடுத்த மிக்சாம் புயலின் போது சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் அவரவர் ரசிகர்களுக்கு பணத்தை கொடுத்து உதவுமாறு கட்டளை இட்டனர். இதனை சிறப்பாக செயல்படுத்திய ரசிகர்களுக்கு நன்றி கூறும் வகையில் விருந்து வைத்து தாமே முன் நின்று பரிமாறி தடபுடலென அசத்தி புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார் சூர்யா. 

மேலும்  மனிதர்களை மட்டும் காப்பாற்றாது விலங்குகளின் நலன் மீது அக்கறை கொண்டு அவற்றைக் காப்பாற்றிய ரசிகர் ஒருவருக்கு ஸ்பெஷலா காஸ்ட்லி கிப்ட் வேற கொடுத்து இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தார் நம்ம சிங்கம். சூர்யாவின் இச்செயலுக்கு திரை உலகம் முதற்கொண்டு மக்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

Also read:அடுத்தடுத்து வெளியாக உள்ள சூர்யாவின் 5 மிரட்டலான படங்கள்.. வாடிவாசலுக்கு பின் சூப்பர் ஸ்டார் இயக்குனருடன் கூட்டணி

Trending News