தமிழ் சினிமாவில் துணை நடிகையாக நடித்து பின்னர் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக மாறியவர்கள் நிறைய உண்டு. இவ்வளவு ஏன் நம்ம த்ரிஷாவே முதல் முதலில் துணை நடிகையாக அறிமுகமானவர் தான்.
சூர்யா மற்றும் முருகதாஸ் கூட்டணியில் உருவாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் ஏழாம் அறிவு. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் என்ற நிறுவனத்தின் மூலம் தயாரித்திருந்தார்.
போதிதர்மரின் சாதனைகளை அடிப்படையாக வைத்து உருவான இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சக்கை போடு போட்டது. மேலும் சந்திரமுகி, எந்திரன் போன்ற படங்கள் படைத்த பாக்ஸ் ஆபீஸ் சாதனைகளையும் இந்தப்படம் நொறுக்கியதாக விளம்பரம் செய்யப்பட்டது.
அப்பேர்பட்ட படத்தில் துணை நாயகியாக நடித்தவர் தான் அபர்ணா பாலமுரளி. சமீபத்தில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று படத்தில் அவருக்கு நாயகியாக நடித்திருந்தார். அபர்ணா பாலமுரளி நடித்திருந்த கதாபாத்திரம் ஆஸ்கார் லெவலுக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.
சூரரை போற்று படத்தின் வெற்றிக்கு பிறகு அபர்ணா பாலமுரளி தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிலும் கவனிக்கப்படும் நாயகியாக மாறி விட்டார். எல்லா வெற்றிக்கும் ஆரம்பம் சின்ன புள்ளி தான் என்பதை நிரூபித்தவர்களில் இவரும் ஒருவர்.
தற்போது ஏழாம் அறிவு படத்தில் அபர்ணா பாலமுரளி நடித்த காட்சியின் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் ரசிகர்கள் மத்தியில் அபர்ணா பாலமுரளி அடுத்ததாக எந்தப் படத்தில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.