புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

தேவர் மகன் 2க்கு சூர்யா வேண்டாம், இவரை போடுங்க.. கொல மாஸ் நடிகரை களமிறங்கிய கமல்

கமல்ஹாசன் நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவில் சுறுசுறுப்பாகக் களமிறங்க தொடங்கி விட்டதால் அவரது படங்கள் பற்றிய அறிவிப்புகள் தினமும் ஏதாவது ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

பல வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் நடிக்கும் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது என்றால் அது விக்ரம் படம். இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் கமலஹாசனுடன் இணைந்து பகத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தை தொடர்ந்து சங்கர் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் உருவான இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. அதனைத் தொடர்ந்து கமலஹாசனின் பழைய சூப்பர் ஹிட் படமான தேவர்மகன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்போவதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

கமல்ஹாசன் மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணனுக்காக கதை திரைக்கதை எழுதி வருகிறாராம். பெரும்பாலும் அந்த படம் தேவர் மகன் 2 ஆக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறது சினிமா வட்டாரம்.

கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் தேவர்மகன்-2 படத்தில் கமல் மற்றும் சூர்யா இருவரும் இணைந்து நடிப்பது போன்ற செய்தி வெளியாகி வைரலானது அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த படத்தில் சூர்யா நடிக்க வாய்ப்பில்லை என்கிறார்கள்.

கமல் தேவர் மகன் 2 படத்தில் விக்ரம் நடித்தால் சரியாக இருக்கும் என கூறியுள்ளாராம். விக்ரமும் நீண்ட வருடமாக வெற்றிப்படம் கிடைக்காமல் தடுமாறி வருவதால் கண்டிப்பாக தேவர்மகன்-2 படம் உருவானால் அவருடைய சினிமா மார்க்கெட்டுக்கு ஒரு உந்துகோலாக இருக்கும். மேலும் இதில் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கிறதாம்.

devar-magan-2-cinemapettai
devar-magan-2-cinemapettai

Trending News