வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

என்னது ரெண்டு இல்ல மூணு பாகமா.. சூர்யாவின் டங்குவாரை மொத்தமாய் பிதுக்கும் மிருகத்தனமான இயக்குனர்

Actor Suriya: நடிப்பின் நாயகனாக தன்னுடைய படங்களில் வெவ்வேறு முகத்தை காட்டி கொண்டிருக்கும் சூர்யா, இப்போது டங்குவாரை மொத்தமாய் பிதுக்கும் அளவுக்கு மிருகத்தனமான இயக்குனருடன் கைகோர்த்து இருக்கிறார். அதுவும் இந்த படம் ஒன்று இரண்டு பாகங்களாக இல்லை, மூன்று பாகமாக தயாராக போகிறது.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சரித்திர படமான கங்குவா, 3டி முறையில் 10 மொழிகளில் தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் டீசர் வந்ததிலிருந்து அந்த படத்தின் பேச்சு அதிகமாக பேசப்படுகிறது.

Also Read: பல கோடிக்கு கார்களை மட்டுமே குவித்து வைத்திருக்கும் சூர்யா.. ஒட்டு மொத்த சொத்து மதிப்பு

அதனால் படத்தை 3 பாகங்களாக எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என இயக்குனர் சிறுத்தை சிவா கூறியிருக்கிறார். அதற்கான திரைகதை அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறது. ஆனால் அடுத்தடுத்த பாகங்களை இப்போதைக்கு எடுக்கவில்லை.

எடுக்காததற்கு காரணம் முதல் படத்தின் வரவேற்பை பொறுத்து இந்த படத்தை இரண்டு பாகத்தோடு நிறுத்தி விடலாமா இல்லை மூன்றாவது பாகமும் எடுக்கலாமா என முடிவு செய்யப்படும். அப்போ கண்டிப்பா இந்த படம் மூன்று பாகமாக வெளிவரும் என்பது நன்றாக தெரிகிறது.

Also Read: ஏழாம் அறிவா, காஷ்மோராவா.? கங்குவா கெட்டப்புக்காக ரிஸ்க் எடுத்த சூர்யா.. ஊறுகாய் போல் பயன்படுத்திய சிவா

அப்படி நடந்தால் இந்தியாவிலேயே அதிக வசூல் செய்யும் படமாக இது இருக்கும். சூர்யாவின் மார்க்கெட்டை உலக தரத்திற்கு கொண்டு செல்லும் படமாக இது அமையும். ஏற்கனவே சூர்யாவின் பிறந்தநாளில் சமீபத்தில் வெளியான கங்குவா படத்தின் கிளிம்ஸ் வீடியோவை பார்த்து பலரும் கதி கலங்கி போனார்கள்.

இதில் அசுரத்தனமாக இருக்கும் சூர்யா பார்ப்பதற்கே பயமுறுத்தும் அளவுக்கு இருந்த கங்குவா ஒரே பாகமாக வெளிவராமல் மூன்று பாகங்களாக வெளியாக போகிறது என்பதை நினைத்துப் பார்த்தாலே டங்குவாரை கழட்டி விட்டது. முதல் பாகத்தின் கிளிம்ஸ் வீடியோவிலேயே கொடூரத்தின் உச்சத்தை காட்டிய சிறுத்தை சிவா, மற்ற இரண்டு பாகங்களில் இன்னும் என்னென்னவெல்லாம் செய்யப் போறாரோ என்று ரசிகர்கள் இப்பவே யோசிக்க ஆரம்பித்து விட்டனர்.

Also Read: கங்குவா அதுக்கு மட்டுமே டபுள் மடங்கு எகிறிய பட்ஜெட்.. பாதி படத்திற்கே மொத்தத்தையும் காலி செய்த சூர்யா டீம்

Trending News