ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

அடிமேல் அடிவாங்கும் சூர்யா, ஜோதிகா.. ஜெய்பீம் படத்தின் அடுத்த பஞ்சாயத்து

சூர்யா நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்த திரைப்படம் ஜெய் பீம். இந்தப் படத்தில் குறிப்பிட்ட ஒரு சமூகத்தினரை தாக்கிப் பேசுவது போல் ஒரு சில காட்சிகள் எடுக்கப் பட்டதாக அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் அந்த படம் வெளியானதில் இருந்தே பிரச்சினைகளை எழுப்பி வந்தனர்.

அதனைத் தொடர்ந்து சூர்யாவை எட்டு உதைப்பவர்களுக்கு ஒரு லட்சம் என தொடர்ந்து சூர்யாவுக்கு அழுத்தம் கொடுத்து வந்த நிலையில் தற்போது சூர்யா மற்றும் ஜோதிகா இருவர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது மேலும் அவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளது.

சூர்யா மற்றும் ஜோதிகா மீது அவதூறு பரப்புதல், இரு சமூகத்தினரிடையே வன்முறையை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் என மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் படத்தை வெளியிட அமேசான் தளத்தின் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஏற்கனவே சூர்யா உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதி அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது தொடர்ந்து இப்போது தொடர்ந்து அவருக்கு அழுத்தம் கொடுத்து வருவதால் சூர்யாவின் அடுத்தடுத்த படங்களுக்கான நிலை என்ன, இந்த பிரச்சனை எப்போது முற்று பெறும் என்பது தொடர் கதையாகி வருகிறது.

நாளுக்கு நாள் ஜெய் பீம் படத்தின் பிரச்சனை இப்படி அதிகரித்துக் கொண்டே செல்வது சூர்யாவுக்கு நல்லது இல்லை என்கிறார்கள் கோலிவுட் வாசிகள். சர்க்கார் படத்திற்கு விஜய்க்கு எப்படி பிரச்சனை வந்ததோ அதைவிட மூன்று மடங்கு பிரச்சனை தற்போது ஜெய்பீம் படத்திற்கு எழுந்துள்ளதாகவும் சூர்யா இறங்கி வராமல் இதற்கான முற்றுப்புள்ளி கிடையாது எனவும் கூறுகின்றனர்.

jaibhim-suriya-salary
jaibhim-suriya-salary

Trending News