திரையில் மீண்டும் ஜோடி சேரும் சூர்யா, ஜோதிகா.. கணவருக்கு கொக்கி போட்ட சந்திரமுகி

Actor Suriya : நட்சத்திர ஜோடிகளான சூர்யா, ஜோதிகா இருவரும் 18 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் திரையில் இணைய உள்ளனர். இதை அறிந்த சூர்யா ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அதேபோல் சினிமாவில் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்த ஜோதிகா பட பிஸியாக இருந்து வருகிறார். மம்முட்டியுடன் தி கோர் படத்தில் நடித்த நிலையில் பாலிவுட்டிலும் கலக்கி வருகிறார்.

இதுதவிர பாலிவுட்டிலும் சில படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார். சூர்யா, ஜோதிகா இருவரும் இணைந்து கிட்டத்தட்ட ஏழு படங்கள் நடித்துள்ளனர். பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன், மாயாவி, ஜூன் 6 மற்றும் சில்லுனு ஒரு காதல் படங்கள் இவர்களது கூட்டணியில் உருவானது.

மீண்டும் ஜோடி சேரும் ஜோதிகா, சூர்யா

இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த ஜோதிகா தனது கணவர் சூர்யாவுடன் நடிக்கவில்லை. இப்போது சூர்யாவின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. டாப் 10 நடிகர்கள் எடுத்துக் கொண்டால் அதில் அவரது பெயரும் இருக்கும்.

இதனால் ஜோதிகா தனது மார்க்கெட்டை ஏற்றுவதற்காக தனது கணவருக்கு கொக்கி போட்டு அவருடன் சேர்ந்து நடிக்க உள்ளார். இப்படத்தை பெங்களூர் டேஸ் படத்தை இயக்கிய அஞ்சலி மேனனோ இயக்க உள்ளார்.

மேலும் இந்த கதை ரொமான்டிக் கதையாக இருந்தால் செமையாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இந்த படத்திற்கான அறிவிப்பு மிக விரைவில் வெளியாக இருக்கிறது.