வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

வசூலில் திணறும் சூர்யாவின் கங்குவா.. 9 நாட்களில் செய்த கலெக்ஷன்

Kanguva Collection : சிறுத்தை சிவா மற்றும் சூர்யா கூட்டணியில் வெளியான கங்குவா படம் வெளியாகி ஒரு வாரம் கடந்திருக்கிறது. ஜெய் பீம் படத்தை தவிர கடந்த சில வருடங்களாக சூர்யாவுக்கு ஹிட் படங்கள் எதுவும் அமையவில்லை. இதனால் கங்குவா படத்தை பெரிதும் நம்பிக்கொண்டிருந்தார்.

சூர்யாவின் கேரியரையே இந்த படம் மாற்றும் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் படம் வெளியான முதல் நாளை நெகட்டிவ் விமர்சனங்கள் வர தொடங்கியது. இதுவே படத்தின் கலெக்ஷன் பாதிப்புக்கு காரணமாக அமைந்தது. சிலர் வேண்டுமென்றே இவ்வாறு நெகட்டிவ் விமர்சனத்தை பரப்புவதாகவும் கூறப்பட்டது.

அதோட இனிமேல் தியேட்டர் வாசலில் யூடியூப்பர் மற்றும் ஊடகங்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் கூறப்பட்டது. மேலும் ஜோதிகாவும் கங்குவா படத்தின் நெகட்டிவ் விமர்சனத்தை குறித்து வேதனையுடன் பதிவு போட்டிருந்தார்.

9 நாட்களில் கங்குவா செய்த கலெக்ஷன்

இந்நிலையில் ஒன்பது நாட்களை கடந்த நிலையில் கங்குவா படம் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்ற விவரம் வெளியாகி இருக்கிறது. மிகப் பிரம்மாண்ட பொருட்கள் உருவான இப்படம் 9 நாட்களில் உலக அளவில் வெறும் 100 கோடி மட்டுமே வசூலை செய்திருக்கிறது.

இதனால் கங்குவா படம் போட்ட பட்ஜெட்டை எடுக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் படத்தில் சத்தம் அதிகமாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில் இறைச்சலை குறைத்து இருந்தனர். அதோட சில காட்சிகளையும் நீக்கு இருந்தனர்.

ஆனாலும் தியேட்டரில் எதிர்பார்த்த அளவு கூட்டம் வரவில்லை. அதோடு அமரன் படமும் தியேட்டரில் அமோக வரவேற்பு பெற்று வருவதால் கங்குவா படத்தின் வசூல் குறைந்து இருக்கிறது. இன்னும் அடுத்தடுத்த வாரங்களில் பெரிய படங்கள் வெளியாக இருக்கிறது.

Trending News