வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

புது கெட்டப்பில் சூர்யா.. கொம்பன் கெட்டப்பில் கார்த்தி.. கிளம்பிய அடுத்த பஞ்சாயத்து

சமீபகாலமாக சூர்யா, கார்த்தி மீது எழுந்த விமர்சனங்கள் கொஞ்ச நஞ்சமில்லை என்று தான் கூற வேண்டும். ஒரு பக்கம் தயாரிப்பாளர்களும் மற்றொரு பக்கம் தியேட்டர் உரிமையாளர்களும் தொடர்ந்து சூர்யாவின் குடும்பத்தையே விமர்சனம் செய்து வந்தனர்.

சூர்யா தற்போது வேண்டுமானால் வசூலில் சக்கரவர்த்தியாக இருக்கலாம். ஆனால் ஆரம்ப காலத்தில் அவரை தூக்கிவிட்டது தியேட்டர் உரிமையாளர்கள் என்பது மறந்துவிட முடியாத ஒன்றுதான். சூர்யா நடிப்பில் வெளியான அனைத்து படங்களுமே தியேட்டரில்தான் வெளியானது. அதிலும் குறிப்பாக பல படங்கள் தோல்வி பெற்றாலும் தியேட்டர் உரிமையாளர்கள் அடுத்தடுத்து படங்களை வாங்கி வெளியிட்டனர்.

அதனை தக்கவாறு பயன்படுத்திக் கொண்ட சூர்யா ஒரு தோல்வி படம், ஒரு வெற்றி படம் என மாறி மாறி கொடுத்து தனது மார்க்கெட்டை நிலை நிறுத்தினார். அதன் பிறகுதான் இவரது படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இருப்பினும் அப்போது போலவே இப்போதும் சூர்யாவிற்கு படங்களை தியேட்டர் உரிமையாளர் வாங்குவதற்கு காத்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக சூரரைப்போற்று திரைப்படம் அமேசான் தளத்தில் வெளியானது. அப்போது தியேட்டர் உரிமையாளர்கள் பெரிதாக சூர்யாவை விமர்சனம் செய்யவில்லை அதற்கு காரணம் அப்போது இருந்த சூழ்நிலை தான்.

ஆனால் தற்போது படங்கள் தியேட்டரில் வெளியிடலாம் என தெரிவித்தும் சூர்யா தனது தயாரிப்பில் உருவாகியுள்ள 4 படங்களையும் அமேசான் தளத்தில் கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் தியேட்டர் உரிமையாளர்களை பயன்படுத்தி வருமானம் பெற்று வந்த சூர்யா. தற்போது OTT தளங்கள் பிரபலமாக இருப்பதால் அதனைப் பயன்படுத்தி வருமானம் பெற்று வருவது நல்லதல்ல என கூறி வருகின்றனர்.

suriya
suriya

மேலும் தன்னை தூக்கி விட்டவர்களை தூக்கி விடாவிட்டாலும் பரவாயில்லை அவருக்கு எதிராக கொடி பிடிப்பது மிகப்பெரிய கேவலமான செயல் என பல தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் வெளியே பொருத்தவரை சூர்யா ஒரு நல்ல மனிதன் தான் ஆனால் தொழில் ரீதியாக இவர் இப்படி செய்வாரா என்பது கேள்விக்குறியாகத்தான் உள்ளது.

karthi
karthi

சூரியா கார்த்தியை வைத்து தனது சொந்த தயாரிப்பில் ஒரு படத்தை தயாரித்து வருகிறார். இப்படி இருக்கும்போது தற்போது சூர்யா மற்றும் கார்த்திக் இருவரும் ஏதோ ஒரு புதிய படத்தின் பூஜைக்கு சென்றது போல் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. ஆனால் அவர்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்றுள்ளனர். மீண்டும் ஒரு புதிய படத்தை தயாரிக்க போகிறார்கள் என பீதியை கிளப்பி வருகின்றனர். மேலும் இப்படத்தையும் வருமானத்திற்காக OTT தளத்திற்கு கொடுத்து விடுவார் என பேச்சி கிளம்பியதால் கடும் கோபத்துடன் இருக்கிறார்கள் தியேட்டர் உரிமையாளர்கள்..

Trending News