வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

சூர்யா – கார்த்தி படத்திற்கு வந்த புதிய சிக்கல்.. என்ன செய்ய போகிறார்கள்.?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா சமீப காலமாக படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், ஏராளமான படங்களை அவரது 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது சூர்யா தயாரிப்பில் 4 படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

அவரது நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம், ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள உடன்பிறப்பே,  நடிப்பில் உருவாகியுள்ள ஓ மை டாக் மற்றும் ரம்யா பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.

இது தவிர தற்போது அவரது தம்பியும், நடிகருமான கார்த்தி நடிப்பில் உருவாக உள்ள புதிய படம் ஒன்றையும் சூர்யா தயாரிக்க உள்ளார். கொம்பன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக கார்த்தி மற்றும் இயக்குனர் முத்தையா கூட்டணி அமைத்துள்ள விருமன் படத்தை சூர்யா அவரது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார்.

தற்போது கார்த்தி மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியத்தேவன் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து சர்தார் படத்தில் நடிக்க உள்ளார். இவ்விரு படங்களையும் முடித்த பின்னர் முத்தையா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

விருமன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் மூலம் பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் இளைய மகள் அதிதி தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

karthi-suriya-viruman
karthi-suriya-viruman

இந்நிலையில் இப்படத்திற்கு புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. அதாவது இப்படத்திற்கு விருமன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே இலங்கையில் இதே பெயரில் ஒரு படம் தொடங்கப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறதாம். இதனால் அந்த படக்குழுவினர் சூர்யா மற்றும் படக்குழுவினரிடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Trending News