வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வாடி வாசலுக்கு பின் அஜித் பட இயக்குனருடன் கூட்டணி சேரும் சூர்யா.. எதிர்பார்ப்பை எகிற வைத்த அப்டேட்

தனுஷை வைத்து அடுத்தடுத்து வெற்றிப் படங்களைக் கொடுத்த வெற்றிமாறன், சூர்யாவிற்கு என்று ஒரு கிராமத்து கதையை படமாக்க உள்ளார். தல அஜித் மற்றும் சிவா கூட்டணியில் விஸ்வாசம் படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

இதனை அடுத்து சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த படம் உருவாகிக் கொண்டிருக்கின்றது. சூர்யாவின் சூரரைப்போற்று படம் OTT தளத்தில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.

இடைப்பட்ட காலத்தில் சூர்யாவுடன் எப்படியாவது ஒரு படம் எடுத்து விட வேண்டும் என்பதே சிவாவின் ஆசை இதனை அடுத்து சூர்யா மற்றும் சிவாவின் கூட்டணியில் அடுத்த படம் ஆரம்பமாகும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இரண்டு முறை சிவாவுடன் கூட்டணியில் நடிக்கப்போவதாக தெரிவித்து கால்ஷீட் பிரச்சனையால் அது நடக்கவில்லை. தற்போது சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் 40வது படத்தை நடித்து வருகிறார்.

இது தவிர வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் நடிக்க உள்ளாராம். இந்த இரண்டு படங்களையும் முடித்தபின் சிவா மற்றும் சூர்யாவின் கூட்டணியில் விரைவில் புதிய படம் ஒன்று எடுக்கப் போவதாகவும், அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

suriya-siva-cinemapettai
suriya-siva-cinemapettai

Trending News