செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

மனைவி பேச்சுக்கு அடிபணிந்து போகும் சூர்யா.. ஜோதிகாவால் ஏற்பட்ட மாற்றம்

Actor Suriya: சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு சூர்யாவுக்கு நிக்க கூட நேரம் இல்லாத நிலையில் படங்களில் புக் ஆகி இருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா குடும்பத்துடன் மும்பையில் குடியேறியது மிகப்பெரிய சர்ச்சையாக வெடித்தது.

அதாவது சூர்யாவை குடும்பத்துடன் பிரித்து தனது சொந்த ஊரான மும்பைக்கு ஜோதிகா அழைத்து சென்று விட்டார் என செய்திகள் வெளியானது. ஆனால் அவர்களின் குழந்தைகளின் படிப்புக்காக மற்றும் தொழில் நிமித்தமாக தான் சூர்யா மும்பையில் வீடு வாங்கியதாக கூறப்படுகிறது.

Also Read : வெற்றிமாறனுக்கு டிமிக்கி கொடுக்கும் விஜய் சேதுபதி.. சூர்யா படத்தில் கைவைத்த கொடுமை

இந்த சூழலில் நீண்ட காலத்திற்கு பிறகு ஜோதிகா மீண்டும் பாலிவுட்டில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அவர் தான் நடித்த வருகிறார் என்றால் இப்போது சூர்யாவும் பாலிவுட் இயக்குனர் உடன் பேச்சுவார்த்தையில் இறங்கி இருக்கிறார். கிட்டத்தட்ட அந்த படம் உறுதியாகிவிட்டது என கூறப்படுகிறது.

மகாபாரத கதையில் கர்ணன் கதாபாத்திரத்தை மையமாக வைத்து அந்த படம் எடுக்கப்படுகிறது. மேலும் பான் இந்திய படமாக இப்படம் உருவாக இருக்கிறது. இந்த படம் மட்டும் நிச்சயம் ஹிட் ஆகிவிட்டால் பான் இந்தியா ஸ்டாராக சூர்யா மாறிவிடுவார். அதோடு மட்டுமல்லாமல் பாலிவுட் கதாநாயகனாக மாறிவிடவும் வாய்ப்பு இருக்கிறது.

Also Read : மூன்று வருடத்திற்கு 6 படங்களில் பிஸியாகும் சூர்யா.. கங்குவா கூட்டணியை தும்சம் செய்ய வரும் பாலிவுட்டின் பிரம்மாண்டம் படம்

இதனால் கொஞ்சம் கொஞ்சமாக சூர்யாவை ஜோதிகா தன் பக்கம் இழுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுகிறது. அதோடு மட்டுமல்லாமல் இந்த இயக்குனரின் அறிமுகமும் ஜோதிகாவால் தான் கிடைத்திருக்கிறதாம். ஆகையால் முழுசாக மும்பை வாசியாகவே சூர்யா மாறிவிடுவாரா என்ற அச்சம் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் வித்தியாசமான மற்றும் நல்ல கதைகளை சூர்யா இப்போது தேர்ந்தெடுத்து வருகிறார். இந்த நிலையில் மனைவியின் பேச்சால் தடம் மாறி பாலிவுட் பக்கம் மொத்தமாக போய்விடுவாரோ என்ற எண்ணம் தான் இப்போது சூர்யா ரசிகர்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது.

Also Read : பாலிவுட் பக்கம் செல்லும் சூர்யா.. 2 பாகங்களாக உருவாகும் பிரம்மாண்ட சரித்திர படம்

Trending News