Suriya: முன்பெல்லாம் ஒரு நடிகரின் செல்வாக்கு என்பது அவர்களுடைய ரசிகர்கள் திரையரங்கிற்கு கூடுவதை வைத்து நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இப்போது நிலைமையே வேற. சமூக வலைத்தளங்கள் தான் எந்த ஹீரோ வெற்றி பெற வேண்டும், எந்த ஹீரோ டம்மியாக்கப்பட வேண்டும் என்பதை முடிவு செய்கிறது.
ஒரு படம் வெற்றி படமா அல்லது தோல்வி படமா என்பதை வீட்டில் இருந்தபடியே 2,3 ட்விட்டர் பதிவு மூலம் செய்து விடுகிறார்கள். ஒரு சில பிரபலங்கள் மனம் திறந்து கொடுக்கும் பேட்டிகளின் மூலம் தான் இதெல்லாம் நடந்து கொண்டிருக்கிறதா என நமக்கு புரிகிறது.
அந்த வரிசையில் சமீப காலமாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தயாரிப்பாளர் கேபி ராஜன் பேசி வருகிறார். அவர் சமீபத்தில் கொடுத்திருக்கும் பேட்டியில் சூர்யா பற்றி ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறார். அஜித் மற்றும் விஜய்க்கு பிறகு சூர்யா தான் என்ற பிம்பம் தமிழ் சினிமாவில் இருக்கிறது.
ஆனால் கேபி ராஜன் விஜய்க்கு இருக்கும் ரசிகர்களின் 25 சதவீதம் பேர் கூட சூர்யாவுக்கு கிடையாது என சொல்லி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் விஜய் மாதிரி சூர்யா அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக அவரால் வெற்றி பெற முடியாது.
பாக்யராஜ், சரத்குமார், டி ராஜேந்தர் போன்றவர்கள் அரசியலுக்கு வந்த கதை தான் சூர்யாவுக்கும் நடக்கும் என தெள்ளத்தெளிவாக பேசி இருக்கிறார். தமிழ் சினிமா தரவுப்படி நடிகர் சூர்யாவுக்கு சமீபத்திய தியேட்டர் ரிலீஸ் வெற்றி படங்கள் எதுவும் கிடையாது என்பதுதான் உண்மை.
பாலிவுட் மோகத்தால், செல்வாக்கை இழக்கும் கொடுமை
சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் போன்ற படங்கள் OTT தளத்தில் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றவை. இப்போது முழுக்க முழுக்க நம்பி இருப்பது கங்குவா படத்தை தான். சூர்யா ஒரு மாதிரியான சறுக்கல்களை சந்தித்து கொண்டிருக்கும் இதுபோன்ற சூழ்நிலையில், புறநானூறு படம் மட்டும் ரிலீஸ் ஆனால் அவருடைய ரேஞ்ச் பெரிய அளவில் இருக்கும்.
இந்தி திணிப்பு பிரச்சனை சமீப காலமாக அதிக அளவில் பேசப்பட்டு வருகிறது. அதை மையப்படுத்தி எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் படம் தான் புறநானூறு. ஆனால் சூர்யாவுக்கு பாலிவுட்டில் நடிக்க வேண்டும் என்ற ஆசை திடீரென ஏற்பட்டு விட்டது. இதனால் இந்த புறநானூறு படத்தில் இந்தி எதிர்ப்பு வசனங்கள் வருவதை எல்லாம் தவிர்க்க வேண்டும் என அவர் இயக்குனர் சுதா கொங்கரா இடத்தில் வலியுறுத்தி வந்து கொண்டிருக்கிறார்.
இதனால் இவர்கள் இரண்டு பேருக்கும் இந்த படத்தின் மூலம் ஒரு விதமான கசக்கும் இருக்கிறது. உண்மையை சொல்லப்போனால் இன்னும் சில நாட்களில் புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலக கூட நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் வரிசையில் நின்று பேசக்கூடிய படம் தான் புறநானூறு.
அது மட்டுமில்லாமல் பாலாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் சூர்யா வனங்கான் படத்தில் இருந்து விலகி விட்டார். தற்போது அருண் விஜய் நடிப்பில் இந்த படம் மிகவும் சிறப்பாக வந்திருப்பதாக தெரிகிறது. பாலா மீண்டும் தன்னை ஒரு சிறந்த இயக்குனர் என இந்த படத்தின் மூலம் நிரூபிக்க இருக்கிறார். இந்த வாய்ப்பையும் சூர்யா இழந்திருக்கிறார். சமீப காலமாக சூர்யாவுக்கு நேரம் சரியில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
முடிவெடுக்க முடியாமல் திணறும் சூர்யா
- மும்பை போனதும் பச்சோந்தியாக மாறிய சூர்யா
- ஜோதிகா எடுத்த முடிவால் திக்கி திணறும் சூர்யா
- கட்சியை பகச்சிக்க முடியாமல் தினரும் சூர்யா