Suriya: அரசனை நம்பி புருஷனை கைவிடறதுன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க. அது நடிகர் சூர்யாவுக்கு சரியாயிடும் போல. கங்குவா படத்திற்கு பிறகு சூர்யாவுக்கு எக்கச்சக்க படங்கள் லைன் கட்டி இருப்பதாக சும்மா கதை தான் சொல்லப்படுகிறது.
உண்மையான நிலவரம் என்ன என்றால் சூர்யாவின் அடுத்த கட்ட சினிமா கேரியர் எப்படி அமையப்போகிறது என்பதை இன்னும் உறுதியாக வில்லை. கங்குவா வரலாற்று படம் என்பதால் சூட்டிங் தொடங்கி ரிலீஸ் ஆக ஒரு குறிப்பிட்ட கால அளவை எடுத்துக் கொள்கிறது.
இதனால் சூர்யாவை ஸ்கிரீனில் பார்த்து ஒரு பெரிய கேப் விழுந்துவிட்டது. இதற்கிடையில் சூரரைப் போற்றும் கூட்டணி அப்படியே இணைந்து புறநானூறு படத்தை எடுக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எல்லாம் வெளியானது.
கேள்விக்குறியாகும் சூர்யாவின் சினிமா கேரியர்
இந்தி எதிர்ப்பு கதைக்களத்தை சூர்யா கையில் எடுத்து டாப் நடிகர்களை விட உச்சத்துக்கு போவார் என அவருடைய ரசிகர்கள் குதூகலத்தில் இருந்தார்கள். இந்தி எதிர்ப்பு படத்தில் நடித்துவிட்டு பொண்டாட்டி ஆசைப்படுற மாதிரி பாலிவுட்டில் எப்படி செட்டில் ஆவது என சூர்யா ஜகா வாங்கி விட்டார்.
கிட்டத்தட்ட இந்த படம் சூர்யாவின் கைவிட்டு போனதாக வலைப்பேச்சு யூடியூப் சேனலில் சொல்லி இருக்கிறார்கள். அது மட்டும் இல்லை வாழ்வோ சாவோ ரிஸ்க் எடுத்து விடுவோம் என இந்த ப்ராஜெக்ட் காக காத்திருப்பவர்கள் தனுஷ் மற்றும் சிவகார்த்திகேயன்.
இரண்டு பேரில் ஒருவர் இந்த படத்தை வளைத்துப் போட்டு விடுவார்கள் என தெரிகிறது. எப்பேர்பட்ட கதைகளத்தை யோசிக்காமல் சூர்யா தவறவிடுகிறார் என்பது அவருடைய ரசிகர்களுக்கு பெரிய வருத்தம் தான்.
அது மட்டும் இல்லாமல் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பும் நடந்து கொண்டிருக்கிறது. இந்த படத்தில் மொத்தம் ஏழு வில்லன்கள் நடிக்க இருக்கிறார்கள். அதில் ஒருவர் தான் உறியடி விஜயகுமார்.
இவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. சூர்யா மற்றும் விஜயகுமார் காம்போவில் படம் வெளியானால் கண்டிப்பாக பெரிய அளவில் ரீச் ஆகும். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் கார்த்திக் சுப்புராஜ் மற்றும் விஜயகுமார் இடையே பெரிய அளவில் மனக்கசப்பு ஏற்பட்டு இருக்கிறது.
இதனால் எட்டு நாட்களே நடித்துவிட்டு விஜயகுமார் இனி படத்தில் நடிக்க மாட்டேன் என்று விலகிக் கொண்டாராம். சூர்யா இந்த பிரச்சனையில் பஞ்சாயத்து பேசி மீண்டும் விஜயகுமாரை நடிக்க வைத்தால் கண்டிப்பாக சூர்யா பாட்டி 44 பெரிய அளவில் வெற்றி பெறும் என தெரிகிறது.
அடுத்தடுத்து தன்னுடைய ப்ராஜெக்ட் களில் நடக்கும் சிக்கல்களை தீர்த்து வைப்பாரா, அல்லது ஜோதிகாவை போல் பாலிவுட் போதும் என களம் இறங்கப் போகிறாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.