திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

சூர்யா நடிக்க தவறிய 4 சூப்பர் ஹிட் படங்கள்.. இப்ப வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம் பாஸ்

சூர்யா நிராகரித்த சூப்பர் ஹிட் படங்களை தற்போது பார்க்கலாம். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்த துப்பாக்கி படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு சூர்யாவுக்கு முதல் முதலாக கிடைத்துள்ளது, ஆனால் அதை வேண்டாம் என்று நிராகரித்து விட்டாராம்.

இந்திய அளவில் பிரபலமான ராஜமௌலியின் படமான RRR படத்தில் நடிப்பதற்கு சூர்யாவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளதாம். ஆனால் மற்ற படங்களின் கால்ஷீட் இருந்ததால் இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை.

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில்  சர்பேட்டா பரம்பரை என்ற படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் முதலில் நடிப்பதற்கு சூர்யாவுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் நடிப்பதற்கு மறுத்து விட்டாராம் சூர்யா. அதுமட்டுமில்லாமல் நாகார்ஜுனாவின் படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்து மிஸ் செய்துள்ளார் சூர்யா.

இது போன்ற சூப்பர் ஹிட் படங்களை தவற விடாமல் இருந்தால் அவர் இழந்த மார்க்கெட்டை கண்டிப்பாக எப்பவோ பிடித்திருக்கலாம் என்பதே கோலிவுட் வட்டாரத்தின் எதிர்பார்ப்பு. நந்தா, பிதாமகன், மௌனம் பேசியதே, காக்க காக்க போன்று தொடர்ந்து பல வெற்றிகளை கொடுத்த சூர்யா.

sarpetta arya

சூரரைப்போற்று என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் தன்னுடைய இடத்தை பிடிக்க அடித்தளம் போட்டுவிட்டார். பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா ஒரு படத்தில் கமிட்டாகியிருக்கிறார், ஞானவேல் பிலிம்ஸ் தயாரிப்பில் மற்றொரு படத்திலும் சூர்யா நடிக்கப் போவதாக செய்திகள் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதைத்தவிர மாதவனின் ராக்கெட் தி நம்பி எபிபிச்ட் என்ற படத்தில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார் சூர்யா.

Trending News