வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

லிங்குசாமி படத்தில் இணைந்துள்ள சூர்யா பட ஸ்டைலிஷ் வில்லன்.. விறுவிறுப்பாக படக்குழு வெளியிட்ட அறிவிப்பு

தமிழ் சினிமாவில் ஆனந்தம், ரன், சண்டக்கோழி, பையா, அஞ்சான் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை வழங்கியவர் முன்னணி இயக்குனர் லிங்குசாமி. இறுதியாக இவர் இயக்கத்தில் வெளியான அஞ்சான் மற்றும் சண்டைக்கோழி 2 ஆகிய படங்கள் படு தோல்வியை சந்தித்ததால் நீண்ட நாட்களாக படம் இயக்காமல் இருந்தார்.

தற்போது நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வருகிறது. இப்படத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கிறார். இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். மேலும் இப்படத்தில் ஆதி, நதியா, அக்ஷரா கவுடா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் லிங்குசாமி இயக்கத்தில் உருவாகி வரும் படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் சிராக் ஜனி இணைந்துள்ளதாக இயக்குனர் லிங்குசாமி தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான காப்பான் படத்தில் சிராக் ஜனி வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் தனக்கு ஏற்பட்ட நஷ்டத்தையும், தனது படங்களின் தோல்வியையும் ஈடுகட்டும் விதமாக லிங்குசாமி இப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம் நிச்சயம் கை கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளார். எனவே இப்படம் லிங்குசாமியின் கனவை நிறைவேற்றுமா என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.

linguswamy-john
linguswamy-john

Trending News