கடந்த இரண்டு நாட்களாகவே தளபதி விஜய் நடிக்கும் தளபதி 66 படத்திற்கு அவருக்கு 120 கோடி சம்பளம் கொடுக்கவுள்ள செய்திதான் தென் இந்திய சினிமாவையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில வருடங்களாகவே விஜய்யின் சினிமா மார்க்கெட் உச்சத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.
அவரது படங்களும் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களிலும் சீராக வசூல் செய்ய ஆரம்பித்தன. அதேபோல் தற்போது விஜய்யின் ஒரு படம் வெளியானால் தென்னிந்தியாவில் மட்டும் 200 கோடி வசூல் செய்யும் அளவுக்கு தன்னுடைய மார்க்கெட்டை பலப்படுத்திவிட்டார் விஜய். இனிமேல் இந்த வசூல் குறைய வாய்ப்பே கிடையாது.
அப்படி இருக்கையில் அடுத்த படமான தளபதி 66 படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் நடிக்க உள்ளார் விஜய். மேலும் அந்த படம் மலையாளம், கன்னடம், ஹிந்தி என மற்ற மூன்று மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது.
விஜய்க்கு கடைசி சில வருடங்களாகவே மார்க்கெட் நன்றாக இருந்தது. ஆனால் சூர்யாவுக்கு அப்படி இல்லை. கொஞ்சம் ஏற்றம் இறக்கமாக தான் இருந்தது. இருந்தாலும் சூர்யாவை நம்பி 200 கோடி பட்ஜெட்டில் படம் தயாரிக்க முன் வந்துள்ளார் கலைப்புலி எஸ் தாணு.
சூர்யா தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் எதற்கும் துணிந்தவன் என்ற சராசரி பட்ஜெட் படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் வருகிற அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.
சூர்யா என்னதான் தொடர் தோல்விப் படங்களைக் கொடுத்திருந்தாலும் அவருடைய ஒரு வெற்றி மொத்தத்தையும் மாற்றி விடும் என்பதை நம்பி மொத்த காசையும் இறக்கியுள்ளாராம் கலைப்புலி எஸ் தாணு.