சூர்யா மற்றும் அமேசான் கூட்டணியில் கடந்த வருட தீபாவளிக்கு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் சூரரைப்போற்று. தியேட்டரில் வெளியாகி இருந்தால் கூட இந்த படம் இப்படி ஒரு வரவேற்பை பெற்று இருக்குமா என்பது சந்தேகம்தான். அமேசான் தளத்தில் வெளியான தான் அந்த படத்தை உலகம் முழுவதும் கொண்டாடி தீர்த்து விட்டனர்.
அதனைத் தொடர்ந்து அமேசான் தளத்துடன் தொடர்ந்து நான்கு படங்கள் ஒப்பந்தம் செய்து அந்த நான்கு படங்களையும் அமேசான் தளத்தில் வெளியிடுவதாக சூர்யா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அந்த வகையில் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் என்ற படமும் ஜோதிகா, சசிகுமார் நடித்த உடன்பிறப்பே என்ற படமும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்றது.
அதனைத் தொடர்ந்து தற்போது தீபாவளியை முன்னிட்டு சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் ஜெய் பீம் என்ற படத்தை அமேசான் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கும் எங்கு திரும்பினாலும் பாசிட்டிவ் விமர்சனங்கள் இருப்பதால் இன்னும் சில தினங்களில் பெரிய அளவு லாபத்தை கொடுக்கும் என கூறுகின்றனர். இந்த படம் தியேட்டரில் வராதது தியேட்டர்காரர்களுக்கு கொஞ்சம் வருத்தம் தான்.
இந்த நேரத்தில் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல ஒரு முக்கியமான பிரச்சனையை ஜெய் பீம் படம் சொல்லியிருப்பதால் சாதாரண மக்களையும் இந்த படம் சென்றடைய வேண்டும் என்பதற்காக ஆங்காங்கே சொந்த செலவு செய்து ரசிகர்கள் படத்தை திரை கட்டி ஓட்டி வருகிறார்களாம். இதைப் பார்த்து கடுப்பான தியேட்டர் உரிமையாளர்கள் இப்படியெல்லாம் செய்வது சரியா என கேட்டு வருகின்றனர்.
அதற்குப் பேசாமல் தியேட்டரில் வெளியிட்டிருந்தால் கூட எங்களுக்கும் லாபம் கிடைத்திருக்கும் எனவும் இப்படி செய்தால் மொத்தமாக எங்களுடைய பிசினஸ் படுத்து விடும் என வருத்தப்பட்டனர். அதுமட்டுமில்லாமல் இது சட்டவிரோதமான செயல் எனவும் சூர்யா இதைப்பற்றி எல்லாம் கேட்க மாட்டாரா? எனவும் ஒரு கருத்தை முன் வைத்துள்ளனர்.