வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமல் போன பட வாய்ப்பு.. மரண ஹிட் கொடுத்த பின் வாய்ப்பிற்காக கெஞ்சும் சியான்

கமலஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் படம் தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு பெற்று வசூல் சாதனைகளையும் முறியடித்தது. சமீப காலமாக தமிழ் சினிமா இது போன்று ஒரு மாபெரும் வெற்றி படத்தை பார்த்ததில்லை. அதிலும் முக்கியமாக கிளைமாக்ஸ் காட்சி இந்த படத்திற்கு ஒரு திருப்புமுனையாக அமைந்து பெரிய அளவில் பேசப்பட்டு வந்தது.

இதற்கு காரணம் கடைசி காட்சியில் ரோலக்ஸ் ஆக வந்து மிரட்டி இருப்பவர் சூர்யா. இந்த ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் கொடூர வில்லனாக நடித்திருக்கும் அவருடைய நடிப்பு பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இவரே இப்படி ஒரு கேரக்டரில் எதிர்பார்க்காத ரசிகர்கள் அவரின் வில்லத்தனத்தையும் கொண்டாடி வருகின்றனர்.

Also read: லோகேஷ் கைவிட்ட வாரிசு நடிகர்.. டர்னிங் பாயிண்ட் என நினைத்து மொக்கை வாங்கிய ஹீரோ

படம் முழுவதும் கமல்,விஜய் சேதுபதி,பகத் பாஸில் இவர்கள் அனைவரும் ஸ்கோர் செய்தாலும் வெறும் ஐந்து நிமிடங்களில் அதையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு சூர்யாவின் நடிப்பு இருப்பதாக ரசிகர்கள் பெரிய அளவில் பாராட்டினார்கள்.முதலில் லோகேஷ் இந்த காட்சியை சியான் விக்ரம் கிட்ட ரோலக்ஸ் கதையை சொல்லி நடிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் சிறுகாட்சியாக இருப்பதால் விக்ரம் இதை செய்வதற்கு மறுத்துவிட்டார்.

பின்னர் ரோலக்ஸ் கதாபாத்திரம் பெரிய அளவில் பெயர் பெற்றதை அடுத்து அந்த கதாபாத்திரத்தை வைத்து முழு படமாகவே எடுக்க முடிவு செய்துள்ளார் லோகேஷ். அந்த வாய்ப்பை நழுவ விட்டதை நினைத்து வருத்தப்பட்டு இருக்கிறார் சியான் விக்ரம்.

Also read: சியான் விக்ரம் மெர்சல் பண்ணும் ‘கடாரம் கொண்டான்’ சண்டைக் காட்சி.! வைரலாகும் வீடியோ

இப்படி கைக்கு எட்டினது வாய்க்கு எட்டாமல் போய்விட்டது இவரின் நிலைமை. மீண்டும் லோகேஷ் இடம் சென்று வேறு வாய்ப்பு இருக்கிறதா என கேட்டிருக்கிறார். இதற்கு லோகேஷ் விஜய் படத்தில் வில்லன் கதாபாத்திரம் இருக்கிறது என சொல்லி இருக்கிறார். ஆனால் அதையும் வேண்டாம் என்று மறுத்துவிட்டார் சியான் விக்ரம்.

பின்னர் லோகேஷ் விக்ரமை வைத்து எப்படியாவது ஒரு முக்கிய படம் எடுக்க வேண்டும் என்று நினைத்து கமல் நடிக்கும் விக்ரம் 2 படத்தில் சியான் விக்ரமுக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்க இருக்கிறாராம். மேலும் இவரை வைத்து தனியாக ஒரு படத்தை இயக்க ஆசைப்படுகிறார் லோகேஷ்.

Also read: 56 வயதிலும் மெனக்கெடும் விக்ரம்.. சியான் வெற்றிக்காக பார்த்து பார்த்து செதுக்கும் ரஞ்சித்

Trending News