புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இயக்குனர் சிவாவிற்கு நாசுக்காக நோ சொன்ன சூர்யா.. காரணம் தெரியுமா?

நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தற்போது இப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது.

இப்படத்தை முடித்த பின்னர் சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் சூர்யா இயக்குனர் சிறுத்தை சிவா படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்த தகவலை இயக்குனர் சிவாவும் பேட்டி ஒன்றில் உறுதி செய்திருந்தார்.

மேலும் சிவா இயக்கத்தில் உருவாக உள்ள புதிய படத்தில் சூர்யா இரட்டைக் கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகவும், இப்படத்தை முடித்த பின்னரே வெற்றி மாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என்றும் கூறப்பட்டது. ரசிகர்கள் யாரும் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

இந்நிலையில் இயக்குனர் சிவாவிடம் இப்போதைக்கு படம் வேண்டாம் என சூர்யா சொல்லிவிட்டாராம். அதாவது தற்போது கைவசம் நிறைய படங்கள் உள்ளது. அதனால் கால்ஷீட் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே ஒரு வருடம் கழித்து படம் பண்ணலாம் என சிவாவிடம் மறைமுகமாக சூர்யா கூறிவிட்டாராம்.

சமீபத்தில் சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த படம் சரியாக ஓடாததால் சூர்யாவிற்கு பயம் வந்துவிட்டதாம். அவர் தற்போது தான் ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், சூரரை போற்று என வெற்றி படங்களில் நடித்து கொஞ்சம் நல்ல பெயரை பெற்று வருகிறார்.

எனவே மீண்டும் அந்த பெயரை அவர் கெடுக்க விரும்பவில்லையாம். அதனால் சிவாவிடம் நேரடியாக படம் வேண்டாம் என்று கூறாமல் மறைமுகமாக இப்போதைக்கு கால்ஷீட் இல்லை என்று கூறிவிட்டாராம்.

Trending News