திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வணங்கான் படத்திற்கு நோ சொன்ன சூர்யா.. புதிய இயக்குனருடன் சேரும் கூட்டணி

சூர்யாவின் 41-வது படமான வணங்கான் படத்தை இயக்குனர் பாலா இயக்கிக் கொண்டிருக்கிறார். பிதாமகன் படத்திற்குப் பிறகு 19 வருடங்கள் கழித்து மீண்டும் இணையும் இவர்களது கூட்டணியில் உருவாகும் வணங்கான் படத்திற்கு ரசிகர்கள் கூடுதல் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

மேலும் சூர்யா இந்த படத்தில் படகோட்டியாக நடிக்கிறார் எதற்காக சூர்யா 40 நாட்கள் வரை படப்பிடிப்பில் கலந்து கொண்டார். அதன் பிறகு திடீரென படப்பிடிப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது.. ஏனென்றால் பாலா நடத்திய படப்பிடிப்பிற்கும் படத்தின் கதைக்கும் சம்பந்தம் இல்லாதது போல் சூர்யாவிற்கு தெரிந்ததால் விலகி விட்டதாக தெரிகிறது.

Also Read: கேட்டதை கொட்டி கொடுத்த பாலா.. பல நாளாகியும் மதிக்காத சூர்யா.!

அதன் பின் பாலாவிடம் படத்தின் கதையை தெளிவாக உருவாக்கிய பிறகுதான் இனி படப்பிடிப்பு துவங்கும் என்று உறுதியாக சொல்லிவிட்டார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான தகவலின் படி வணங்கான் கதையை சூர்யா மாற்ற சொல்லிவிட்டதால், பாலா புதிய கதையை எழுதி வருகிறார்.

இதற்காக முக்கியமான புதிய திரைக்கதை எழுதுவதில் பாலா உடன் இயக்குனர் அருண் பிரபுவும் இணைந்துள்ளார் ஏற்கனவே அருவி படத்தை இயக்கியதன் மூலம் நல்ல பெயர் வாங்கிய அருண்பிரபு சூர்யாவின் அழைப்பின் பேரில் வணங்கான் படத்தில் பணியாற்றுவதாகவும் கூறப்படுகிறது.

Also Read: சூர்யாவுடன் இருக்கும் பிரச்சனையை பொது இடத்தில் உறுதிசெய்த பாலா.. வணங்கான் பட நிலைமை இதுதான்!

இதன்பிறகு பாலா மற்றும் அருண் பிரபு இணைந்து திரைக்கதை எழுதி முடித்ததும் வணங்கான் படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்க உள்ளது. ஏற்கனவே இந்தப் படம் மீனவர் பிரச்சினை குறித்து அலசும் படமாக இருக்கும் என்றும், சூர்யா இந்தப் படத்தில் இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறார்.

அதில் ஒரு கேரக்டர் மாற்றுத்திறனாளியாக நடிக்கிறார் என்றும் சொல்லப்பட்டது. இதில் சூர்யாவிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துவரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தை 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த திரைப்படம் தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக இருக்கிறது என்ற தகவலும் சமீபத்தில் வெளியானது.

Also Read: பாலா அப்படிப்பட்ட மனுஷன் கிடையாது.. வணங்கான் படப்பிடிப்பில் என்ன நடந்தது தெரியுமா.?

Trending News