சூர்யா, அனுஷ்கா நடிப்பில் ஹரி இயக்கத்தில் தேவிஸ்ரீபிரசாத் இசையில் 2010-ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் சிங்கம் 1. அதைத்தொடர்ந்து சிங்கம் 2 படமும் வெளியாகி தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா என அனைத்து பகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் படம் சூர்யாவுக்கு தென்னிந்தியாவில் மிகப்பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்தது.
அதுமட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்ட படம் என்ற பெருமையைப் பெற்றது. நடிகர் சூர்யாவை சூப்பர் ஸ்டார் ரேஞ்சுக்கு உச்சத்தில் உயர்த்தியது சிங்கம் திரைப்படம் என்றால் மிகையாகாது. இந்தப்படத்தில் நடித்த நைஜீரியன் நடிகர் செக்வுமே மால்வின் என்பவர் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவார்.
அதே சம்பவம் தான் நைஜீரிய நடிகரின் நிஜ வாழ்க்கையிலும் நடந்துள்ளது. ஏனென்றால் கடந்த சில தினங்களுக்கு முன்பு சந்தேகத்தின் அடிப்படையில் மால்வினிடம் விசாரித்த கிழக்கு பிரிவு பெங்களூர் போலீசார், மருத்துவ விசாவில் இந்தியாவிற்கு வந்ததாகவும், மும்பையில் உள்ள நியூயார்க் திரைப்பட அகாடமி இரண்டு மாதம் பயிற்சி பெற்று உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அதன்பிறகு போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இவரிடமிருந்து 15 கிராம் மடமை போதை பொருள், 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன்கள், 250 மிலி ஹாஷ் ஆயில் போன்றவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அத்துடன் இவர், சில தொழிலதிபர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் போதைப்பொருளை விநியோகம் செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதை அறிந்த ரசிகர்கள் சிங்கம் படத்தில் நடித்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார் என்று நைஜீரிய நடிகரை சோஷியல் மீடியாவில் கலாய்க்கின்றனர்.