திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

சூர்யா, சிறுத்தை சிவா கூட்டணியில் இணைந்து விஜய் பட நடிகை.. கெத்து தான் போ!

சூரரைப் போற்று படத்தின் வெற்றிக்கு பிறகு சூர்யா அடுத்தடுத்து வெற்றிப் படங்களாக கொடுக்க வேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் அடுத்ததாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா 40 படம் வெளியாக உள்ளது.

அதனைத் தொடர்ந்து புதுமுக இயக்குனர் இயக்கத்தில் வழக்கறிஞர் வேடத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார். அந்த படத்தின் பெயர் தற்போது வரை அறிவிக்கப்படவில்லை. ஏன் அந்த படத்தில் சூர்யா நடிக்கிறார் என்பதே சமீபத்தில் படப்பிடிப்பில் இருந்து கசிந்த புகைப்படத்தினால் தான் தெரிய வந்தது.

அதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் மற்றும் சூர்யா கூட்டணியில் வாடிவாசல் படம் உருவாக உள்ளது. இதற்காக காங்கேயம் காளைகள் இரண்டு கொண்டு வந்து தினமும் சூர்யா அதனுடன் பயிற்சி எடுத்து வருவதாக சமீபத்தில் படத்தின் தயாரிப்பாளர் தாணு ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அடுத்ததாக சூர்யா யாருடன் படம் செய்யப் போகிறார் என்ற கேள்வி கோலிவுட் வட்டாரங்களில் அதிகமானது. அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது. ஏற்கனவே சூர்யா மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் ஒரு படம் கைவிடப்பட்டது.

சிறுத்தை சிவாவுக்கு ரஜினியின் அண்ணாத்த பட வாய்ப்பு கிடைத்ததால் சூர்யாவே அந்த படத்தை டிராப் செய்ததாக செய்திகள் வெளியானது. தற்போது மீண்டும் இருவரும் இணைய வாய்ப்பு கிடைத்துள்ளதால் அதை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

அந்த வகையில் சிறுத்தை சிவா மற்றும் சூர்யா கூட்டணியில் ஒரு படம் உருவாகி உள்ளது. மேலும் இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தற்போது தளபதி 65 படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் பூஜா ஹெக்டே ஒப்பந்தமாகியுள்ளாராம். முறையாக அறிவிக்க வேண்டும் என்பதற்காக இதை ரகசியமாக வைத்துள்ளதாம் படக்குழு.

pooja-hegde-cinemapettai
pooja-hegde-cinemapettai

Trending News