வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

2 வாரத்தில் ஓடிடிக்கு பார்சல் பண்ணப்பட்ட கங்குவா.. ரிலீஸ் தேதி தெரியுமா?

Kanguva OTT release: நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான படத்தின் OTT ரிலீஸ் தேதி வெளியாகி இருக்கிறது. கடந்த நவம்பர் 14ஆம் தேதி சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா படம் ரிலீஸ் ஆனது. முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு சூர்யாவின் இந்த படம் பெரிய அளவில் நெகட்டிவ் விமர்சனத்தை பெற்றது.

இதற்கு முதல் காரணமாக படத்திற்கு கொடுக்கப்பட்ட ஓவர் பில்டப் போட சொல்லலாம். இதைத் தொடர்ந்து நடிகர் ஜோதிகா வெளியிட்ட அறிக்கை படத்தின் மீதான நெகட்டிவ் விமர்சனத்தை இன்னும் அதிகரித்தது என்று தான் சொல்ல வேண்டும்.

எது எப்படியோ அடுத்தடுத்து கார்த்திக் சுப்புராஜ் மற்றும் ஆர் ஜே பாலாஜியின் படங்கள் சூர்யாவை மீண்டும் தலை நிமிர்த்தும் என அவருடைய ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். எப்போதுமே ஒரு படம் ரிலீஸ் ஆன பிறகு 60 நாட்கள் கழித்து தான் ஓடிடி தளத்திற்கு வரும்.

ஓடிடிக்கு பார்சல் பண்ணப்பட்ட கங்குவா

ஆனால் கங்குவா படம் ரிலீஸ் ஆகி இரண்டு வாரங்கள் முடிவடைந்து இருக்கும் நிலையில் ஓடிடி ரிலீஸ்
குறித்து தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த படம் வரும் டிசம்பர் 13ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக இருக்கிறது. இதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சூர்யாவின் கனவு படமாய் உருவான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை அடையாததால் அதிரடியாக ஓடிடி தளத்திற்கு வந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

Trending News