வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

திடீரென இளம் இயக்குனருடன் கூட்டணி சேர்ந்த சூர்யா.. அப்போ வெற்றிமாறனுக்கு டாட்டாவா?

கைவசம் பல படங்கள் வைத்திருந்தாலும் முன்னணி இயக்குனர்களை எல்லாம் ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு தற்போது இளம் இயக்குனருடன் திடீரென சூர்யா கூட்டணி சேர்ந்துள்ளது படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரட்டிப்பாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போதைக்கு பிஸியாக இருக்கும் நடிகர்களில் ஒருவர் சூர்யா. சூரரைப் போற்று வெற்றியை தொடர்ந்து தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

இதன் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மேலும் சூர்யா பாண்டிராஜ் படத்தில் நந்தா படத்திற்கு பிறகு ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் அடுத்ததாக வெற்றிமாறனுடன் சேர்ந்து வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில் திடீரென ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து விட்டார். தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் லோகேஷ் கனகராஜ் உடன் கூட்டணி சேர உள்ளாராம்.

irumbukai-maayavi-suriya
irumbukai-maayavi-suriya

இரண்டாவது படமே சூர்யாவுடன் இரும்புக்கை மாயாவி படத்தை உருவாக்க இருந்ததாம். ஆனால் எதிர்பாராத நிலையில் அந்தப் படம் கைவிடப்பட்டதால் தற்போது அந்த கதையை மேலும் மேலும் மெருகேற்றி வருவதாக குறிப்பிட்டுள்ளார். இரும்புக்கை மாயாவி படமும் ஒரு சயின்டிபிக் திரில்லர் அம்சம் கொண்ட கதை தானாம்.

Trending News