சூர்யா நடிப்பில் சிவா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் கங்குவா. இப்படத்திற்கு சினிமா விமர்சகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில், இதை எதிர்பார்க்காத படக்குழு அப்செட்டில் உள்ளனர்.
இதற்கு காரணம் இப்படத்தைப் பற்றி புரமோசன்களிலும் மீடியாவிலும், ஆடியோ வெளியீட்டு விழாவிலும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, சூர்யா மற்றும் படக்குழுவினர் ஓவர் ஹைப்புடன் பேசியதுதான் காரணம் என கூறப்படுகிறது. இருப்பினும் இப்படம் ரூ.90 கோடிக்கு மேல் உலகம் முழுவதும் வசூலித்துள்ளது.
இப்படத்தை அடுத்து, சூர்யா தனது 45 வது படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்குகிறார். சமீபத்தில் ஆர்.ஜே.பாலாஜி தனக்கு இப்படத்தில் பணியாற்ற வாய்ப்பளித்தது பற்றியும், கதையைக் கேட்ட சூர்யா எத்தனை மணி நேரத்தில் ஓகே சொன்னார் என பல விஷயங்களையும் ஒரு நிகழ்ச்சியில் ரசிகர்களிடம் தெரிவித்தார்.
இந்த நிலையில் கங்குவா ஆடியோ விழா நிகழ்ச்சியில், நடிகர் போஸ் வெங்கட் விஜய்யின் தவெக கட்சியையும் அவரையும் சீண்டி, சூர்யாவுக்கு ஆதரவளித்து அவரைப் பாராட்டுவதுபோல் பேசியிருந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போஸ் வெங்கட் பேசியது குறித்து ஆர்.ஜே.பாலாஜி கூறியதாவது:
இதுகுறித்து நடிகரும் இயக்குனருமான ஆர்.ஜே. பாலாஜி கூறியதாவது: ’’பெரிய ஆடியோ லாஞ்ச் நடக்குது. அங்க சூர்யா சாரோட ரசிகர்கள் இருக்காங்க. அந்த இட த்தைப் பயன்படுத்தி ஒருவர் வேறு எதோ கருத்தை சொல்வது மாதிரி இருந்துச்சு. அதை சொல்லத் தேவையில்லை.
எல்லோருக்கும் ஒரே ரூட் கிடையாது. உதாரணம் விஜய் சார். அவருக்கு ரொம்ப உயரிய இடத்துல இருக்காருனா, சினிமாவ விட்டுட்டு, அரசியல தேர்ந்தெடுத்தாருன்னா அவரு தேர்ந்தெடுத்த பாதை அது. அதன் மூலமா நல்லது செய்ய முடியுமான்னு நினைச்சு வர்றாரு. அப்படி வரும் போது. அவரு வரட்டும், வந்து பார்க்கப்படும், அதன்பிறகு கருத்து சொல்லலாம். அவரு வருவற்கு முன்னமே இவருதான் வரனும், அவருதான் வரனும், அவரு ஏன் வரனும், அவருக்கு பதிலா இவருதான் வரனும்னு சொன்னதில எனக்கு உடன்பாடு இல்லை.
இது 26 ஆம் தேதி நடந்து. அந்த இடத்திலயே இதை நான் பதிவு செய்ய விரும்பினேன். அடுத்த நாள் விஜயின் தவெக மாநாடு நடக்கவிருந்தது. அப்படியிருக்கும் போது அந்த இடத்தை அந்தக் கூட்டத்தை பயன்படுத்தி அந்த இடத்தோட கருத்து மாதிரி மாத்துனதில எனக்கு உடன்பாடு இல்லை. அதனால அதுகுறித்து கிளாரிஃபைவ் பண்ணனுன்னு நினைச்சேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
இதுதான் ஆர்.ஜே.பாலாஜியோட உண்மை முகம்!
சூர்யாவின் கங்குவா ஆடியோ விழாவில் விஜய்யை மறைமுகமாக தாக்கி போஸ் வெங்கட் பேசிய நிலையில் யாருக்கும் சார்ந்திராமல் பொதுவான கருத்தை ஆர். ஜே.பாலாஜி பேசியிருக்கிறார். இத்தனைக்கும் அவர்தான் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குனராக இருந்தாலும் அவர் பேசியதை சூர்யாவே பாராட்டுவார். இதுதான் அவரோட உண்மை முகம். இப்படி நேர்மையா பேசறதால தான் சூர்யாவும் அடுத்த படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்திருப்பார் என ரசிகர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.