சூர்யாவின் பல நாள் தூங்காத இரவிற்கு காரணமாய் அமைந்தது கங்குவாவின் படுதோல்வி. 10 வருடங்கள் சினிமாவில் இருந்து பின் தங்கியதாய் உணர்ந்த சூர்யா இப்பொழுது அதற்கெல்லாம் பதில் தேட ஆரம்பித்து விட்டார்.
சூர்யாவின் 45வது படம் சூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. பழைய தோல்விகளிலிருந்து மீள்வதற்கு அவருக்கு சற்று சிரமம் ஏற்பட்டுள்ளது. சூட்டிங் ஸ்பாட்டில் மிகவும் இறுக்கமாய் காணப்படுகிறார். இருந்தாலும் தன்னை தயார் படுத்திக் கொண்டு கேமரா முன்னால் வந்து நிற்கிறாராம்.
இதனால் தெளிவாக யோசித்து ஒரு தில்லாலங்கடி முடிவை எடுத்துள்ளார். கர்ணனுக்கு கவச குண்டலம் போல். அரசியலுக்கு ஒரு பிரசாந்த் கிஷோர் போல் தனக்கு ஒரு ஆள் வேண்டும் என ஒருவரை தேடி கண்டுபிடித்துள்ளார் சூர்யா. அவர் ஒரு மும்பை கார்.
பாலிவுட் ஹீரோ சல்மான்கான் இடம் ஒருவர் வேலை செய்துள்ளார். சல்மான்கான் கேரியரில் பீல்ட் அவுட் ஆகும்போது இவர் அவரிடம் சேர்ந்துள்ளார். மீண்டும் சல்மான் கானின் கேரியரை உச்சத்துக்கு கொண்டு சென்றவரும், அவருக்கு வலது கரம் போல் செயல்படுபவரும் அந்த நபர் தானாம்.
இப்பொழுது சூர்யா அந்த நபரிடம் பேசி தனக்காக வேலை செய்யும்படி கூறியிருக்கிறார். இனிமேல் சூர்யாவிற்கு வரும் கதைகள், அதற்கு உண்டான முடிவுகள், யார் யாருக்கு எந்தெந்த பட்ஜெட்டில் படம் பண்ண வேண்டும் போன்றவற்றையெல்லாம் அவர்தான் கண்காணித்துக் கொள்வாராம்.
இப்படி மொத்த பொறுப்பையும் சூர்யா அவரிடம் ஒப்படைத்து விட்டார். இனிமேல் அந்த நபர் சொன்னால் மட்டும் தான் சூர்யா அடுத்த ஸ்டெப் வைப்பாராம். இப்படி முழுக்க முழுக்க தன் சுமைகளை எல்லாம் சல்மான்கான் வலது கரமிடம் ஒப்படைத்து விட்டார் புது கங்குவா .