திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

Suriya: விஜய்க்கு போட்டியாக அரசியல் வியூகம் எடுக்கும் சூர்யா.. சத்தமே இல்லாமல் சிங்கம் செய்யும் வேலை

Suriya: விஜய் கோட் படத்தை முடித்த கையோடு தளபதி 69ல் நடிக்க உள்ளார். இதற்கு அடுத்து முழு நேர அரசியல் பயணத்தை தொடங்கும் அவர் 2026 தேர்தலை எதிர்கொள்ள காத்திருக்கிறார்.

இதை ரசிகர்கள் மட்டுமல்லாமல் அரசியல் புள்ளிகள் கூட உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். அதேபோல் அவருடைய கட்சியின் மூலம் செய்யும் நலத்திட்டங்களும் மக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது.

இந்நிலையில் இவருக்கு போட்டியாக சூர்யாவும் அரசியலுக்கு அடித்தளம் நாட்ட இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. ஏற்கனவே இவருடைய நற்பணி இயக்கம் மூலம் பல விஷயங்களை செய்து வருகிறார்.

சூர்யாவின் அரசியல் வியூகம்

அதன்படி இந்த இயக்கம் 60 மாவட்டங்களாக பிரிந்து செயல்பட்டு வருகிறது. அதில் தற்போது வார்டு வாரியாக நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பான ஆலோசனை கூட்டமும் நடைபெற்றுள்ளது.

அந்த வகையில் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இந்த மீட்டிங் நடைபெற்று இருக்கிறது. இதில் கலந்துகொண்ட நிர்வாகிகளிடம் எதிர்கால திட்டமிடல் மற்றும் இயக்கத்தை வலுப்படுத்துவது குறித்து பேசப்பட்டிருக்கிறது.

இந்த செய்தி தற்போது கசிந்துள்ள நிலையில் விஜய்க்கு போட்டியாக சூர்யா அரசியல் வியூகத்தை கையில் எடுக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏற்கனவே சூர்யா தன் ரசிகர்களை சந்தித்த போது கூட இப்படித்தான் பேசப்பட்டது.

ஆனால் தற்போது இது உறுதியாகும் என்ற பேச்சும் கோலிவுட் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆக மொத்தம் கமல், விஜய் வரிசையில் சூர்யாவும் விரைவில் தன் அரசியல் வருகையை மக்களுக்கு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News