திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

Suriya : கங்குவாவுக்கு அடுத்து ரஜினி பட இயக்குனருடன் கூட்டணி போடும் சூர்யா.. மிரளவிடும் வில்லன் யார் தெரியுமா.?

சிறுத்தை சிவா இயக்கத்தில் இப்போது சூர்யா கங்குவா படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யாவின் வாடிவாசல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது.

ஆனால் இப்போதும் வெற்றிமாறன் விடுதலை 2 படத்தில் பிஸியாக இருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்பு தாமதமாகிறது. இதனால் இப்போது சூர்யா தனது அடுத்த பட வேலைகளை தொடங்க இருக்கிறார். ஜிகர்தண்டா படத்தின் மூலம் பிரபலம் அடைந்த கார்த்திக் சுப்புராஜின் படத்தில் தான் சூர்யா அடுத்ததாக நடிக்க இருக்கிறார்.

ரஜினிக்கு பேட்ட, தனுஷுக்கு ஜகமே தந்திரம் போன்ற படங்களை கார்த்திக் சுப்புராஜ் கொடுத்திருக்கிறார். இந்நிலையில் முதல்முறையாக சூர்யா அவர்களுடன் கூட்டணி போட இருக்கிறார். இந்த படத்தின் 80 சதவீத படப்பிடிப்பு செட்டில் நடக்க திட்டமிட்டுள்ளனர். மீதமுள்ள 20% மட்டும்தான் வெளியில் சூட்டிங் எடுக்க உள்ளனர்.

தனுஷ் பட வில்லனுடன் மோதும் சூர்யா

மேலும் ஜூன் முதல் வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. பாலிவுட்லிருந்து கதாநாயகியை தேர்வு செய்ய இருக்கிறார்களாம். ஆனால் சூர்யாவுடன் மோதும் வில்லன் நடிகர் யார் என்பதை கார்த்திக் சுப்புராஜ் முடிவு செய்துவிட்டார்.

அதாவது மலையாளத்தில் புகழ்பெற்ற ஜோஜு ஜார்ஜ் தான் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார். இவர் தமிழில் ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் படத்தில் மிரட்டி இருந்தார். அவரின் நடிப்பை பார்த்து அசந்து போய் தன்னுடைய அடுத்த படத்திலும் புக் செய்துள்ளார்.

மேலும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் தான் இசையமைக்க இருக்கிறார். கண்டிப்பாக இந்த கூட்டணி தாறுமாறாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் படத்தைப் பற்றிய அறிவிப்பு இன்னும் சில வாரங்களில் வெளியாக இருக்கிறது.

Trending News