வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

வெளியாகும் முன்பே 50 கோடி லாபம் பார்த்த சூர்யா.. எல்லாம் யார் மேல உள்ள நம்பிக்கை தெரியுமா.?

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் தயாராகி வெளியீட்டிற்காக வரிசை கட்டி நிற்கின்றன. ஆனால் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதால், நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் திரையரங்குகளிலும் 50% இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் நடிகர் அஜித் உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக இருந்த நிலையில், வெளியீட்டை தள்ளி வைத்துள்ளனர். மேலும் சில படங்கள் ஓடிடி பக்கம் சென்றுவிட்டன. அந்த வகையில் தற்போது நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகி வரும் படம் தான் வாடிவாசல்.

எழுத்தாளர் செல்லப்பாவின் வாடிவாசல் நாவலை தழுவி உருவாகி வரும் இப்படத்தை வி.கிரியேஷன் சார்பாக கலைப்புலி தாணு தயாரிக்கிறார். மேலும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கும் இப்படம் இந்தாண்டு மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னும் படத்தின் பணிகள் முழுமையாக முடிவடையவில்லை இருப்பினும் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு படத்தின் வியாபார வேலைகளை இப்போதே தொடங்கி விட்டார். அதன்படி வாடிவாசல் படத்தின் ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி தளமான சோனி லைவ் நிறுவனத்திற்கு சுமார் 50 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துவிட்டாராம்.

வெளியாகும் முன்பே இத்தனை கோடிக்கு வியாபாரமா என கோலிவுட் ஆச்சரியத்தில் உள்ளது. இதற்கு காரணம் முன்னதாக சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தின் வெற்றியும், இயக்குனர் வெற்றி மாறன் மற்றும் சூர்யாவின் காம்போவும் தான் என கூறப்படுகிறது. எல்லாம் இவர்கள் கூட்டணியில் உள்ள பெரும் நம்பிக்கை தான் என்று கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

அதுமட்டும் இல்லாமல் வாடிவாசல் என்ற தலைப்பே படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. தயாரிப்பாளர் என்ற பார்வையில் சூர்யா எப்படி காய் நகர்த்த வேண்டும் என்பதை தெரிந்து தரமாக பிசினஸ் செய்து முடித்துவிட்டார்.

Trending News