தமிழ் சினிமாவில் நடிகர்கள் இணைந்து நவரசா எனும் குறும்படத்தில் நடித்துள்ளனர். 9 இயக்குனர்களும் 9 கதாநாயகர்களும் இணைந்து இப்படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த அனைத்து குறும்படங்களும் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது.
இக்குறும்படம் 9 குணாதிசயங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது, சிரிப்பு, காதல், வியப்பு, வெறுப்பு, கோபம், ஆச்சர்யம் மற்றும் அழுகை போன்ற அனைத்து குணாதிசயங்களை மையமாகக் கொண்டு ஒவ்வொரு குறும்படமும் உருவாகியுள்ளது.
இதில் சூர்யா, விஜய் சேதுபதி, பிரகாஷ்ராஜ், அரவிந்த்சாமி, சித்தார்த், அதர்வா, பாபி சிம்மா, ரேவதி, அதிதி பாலன், ரித்விகா மற்றும் யோகி பாபு என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் இந்த 9 குறும்படங்களையும் கௌதம் வாசுதேவ் மேனன், அரவிந்த்சாமி, ப்ரியதர்ஷன், கார்த்திக் நரேன், வசந்த் சாய், கார்த்திக் சுப்புராஜ், பிஜோய் நம்பியார், சர்ஜ்ன் மற்றும் ரவீந்திரன் பிரசாந்த் அனைவரும் இயக்கியுள்ளனர். மேலும் இக்குறும் படத்தை மணிரத்தினம் மற்றும்ஜெயேந்திர பஞ்சாபிகேசன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.
திரைத் துறையில் பணியாற்றும் சிறு கலைஞர்கள் சமீபகாலமாக பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் 6 மாத காலமாக கஷ்டப்பட்டு வரும் திரைத்துறை கலைஞர்களுக்கு ஆக இப்படத்தில் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்து மற்றும் இயக்கி கொடுத்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி என இப்படத்தை தயாரித்த மணிரத்னம் தெரிவித்துள்ளார்.
மேலும் நவரசா உருவாக்கிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி எனவும் தெரிவித்தார். மேலும் உங்களால் 6 மாத காலமாக கஷ்டப்பட்டு வந்த திரைத்துறை கலைஞர்களுக்கு 12000 குடும்பத்தினர்களின் வீட்டு தேவைகளுக்கு உதவ முடிந்ததாக தெரிவித்தார். தற்போது நன்றி உணர்ச்சியின் மகிழ்ச்சியில் இருக்கிறோம், நீங்கள் இல்லாமல் இந்த மகிழ்ச்சி இல்லை என மணிரத்தினம் தெரிவித்துள்ளார்.