வியாழக்கிழமை, அக்டோபர் 31, 2024

சூர்யா கூட்டணியில் ரீமேக் ஆகும் சூப்பர் ஹிட் பாலிவுட் படம்.. ஆனா ஹீரோ நம்ம ரொலெக்ஸ் இல்லையாம்

Suriya Going Remake the Super Hit Bollywood Movie: தற்போது சுயா இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வரும் நிலையில், இப்படத்தை தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல், சுதா கொங்கராவின் புறநானூறு உள்ளிட்ட பல படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளார். மேலும் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிப்பில் சூரரை போற்று திரைப்படத்தின் ஹிந்தி ரிமேக்கையும் சூர்யா தயாரித்து வருகிறார்.

இப்படத்தை தயாரிப்பதற்காகவே மும்பையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வீட்டை வாங்கி அங்கேயே தனது மகள், மனைவி, மகன் என குடிபெயர்ந்துள்ளார். ஆரம்பத்தில் நடிகர் சூர்யா தனது மனைவியான ஜோதிகாவின் தாய், தந்தை நலனை கருதி அங்கேயே செட்டிலானதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதற்கான உண்மை காரணம் வெளியாகியுள்ளது.

சூர்யா நடித்த சூரரை போற்று திரைப்படம் மெகா ஹிட்டானதையடுத்து சிறந்த நடிகர் உள்பட இப்படத்துக்கு மொத்தம் 6 தேசிய விருதுகள் கிடைத்தது. இதன் மூலமாக மற்ற மொழி ரசிகர்களும் சூர்யாவை கொண்டாட ஆரம்பித்தனர். இதனை தொடர்ந்து, இனி தான் நடிக்கும் படங்கள் அனைத்தும் பேன் இந்தியா படங்களாக இருக்க வேண்டும் என சூர்யா முடிவு செய்துள்ளார். அதன் காரணமாகவே கங்குவா திரைப்படம் 10 மொழிகளில் உருவாகி வருகிறது.

Also Read: கொந்தளித்து மேடையிலேயே கோவப்பட்ட அமீர்.. சூர்யா கார்த்தி சண்டையைக் கிண்டிய பிரஸ்மீட்

இப்படி மற்ற மொழி ரசிகர்களை கவர வேண்டி நடிகர் சூர்யா தற்போது எந்த தமிழ் நடிகரும் செய்யாத ஒன்றை செய்து வருகிறார். பொதுவாக ஹிந்தி அல்லது மற்ற மொழி படங்கள் நன்றாக இருந்தால் அந்த படத்தின் ரீமேக்கில் தமிழ் நடிகர்கள் நடிக்க ஆசைப்படுவார்கள். ஆனால் நடிகர் சூர்யா சற்று வித்தியாசமாக ஹிந்தியில் மெகாஹிட்டான ஒரு படத்தை தானே தயாரிக்க முன்வந்துள்ளார்.

இயக்குனர் விது வினோத் சோப்ரா இயக்கத்தில் கடந்த அக்டோபர் மாதம் பாலிவுட்டில் வெளியான +12 பெயில் படம் மெகாஹிட்டானது. ஐ.பி.எஸ் அதிகாரி மனோஜ் குமார் ஷர்மாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் ஹிந்தி நடிகர் விக்ராந்த் மெஸ்ஸி ஹீரோவாக நடித்து அசத்தியிருப்பார். ஏழை குடும்பத்தில் பிறந்து, அரசு பள்ளியில் தாய் மொழியில் படித்தவர் எப்படி பல கஷ்டங்களை கடந்து ஐ.பி.எஸ் அதிகாரி ஆனார் என்பதே இப்படத்தின் கதைக்களம்.

இப்படம் ஏற்கனவே தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான நிலையில், தற்போது இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை சூர்யா வாங்கியுள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர் கார்த்தி அல்லது இளம் நடிகர்கள் யாரேனும் ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹிந்தியில் எத்தனையோ நடிகர்கள் இருந்தும் நடிகர் சூர்யா இப்படத்தின் தமிழ் உரிமையை வாங்கி பலரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளார்.

Also Read: தளபதி மீது சூர்யா குடும்பத்திற்கு இருக்கும் ஈகோ.. இவ்வளவு பொறாமையா?. 

- Advertisement -spot_img

Trending News