திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மொத்தமாக பாலிவுட் பக்கம் சாய்ந்த சூர்யா.. ஹிந்தி சூரரைப் போற்று படத்தில் செஞ்ச சம்பவம்

Suriya: தற்போது மல்டி ஸ்டார்கள் இணைந்து படம் நடிப்பது சர்வ சாதாரணமாக ஆகிவிட்டது. அந்த வகையில் தமிழ் முன்னணி நடிகர்களின் படத்தில் மற்ற மொழிகளில் இருந்து நடிகர்கள் கேமியோ ரோல் மற்றும் வில்லன் கதாபாத்திரத்தையும் எடுத்து நடித்து வருகிறார்கள். அதே மாதிரி தற்போது தமிழ் சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்களும் அக்கட தேசத்து படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் சூர்யா நடிப்பில் சுதா கொங்காரா இயக்கத்தில் வெளிவந்த சூரரைப்போற்று படம் ஹிந்தியில் சர்ஃபிரா என்ற டைட்டிலுடன் ரீமேக் பண்ணி இருக்கிறார்கள். இதில் ஹீரோவாக அக்ஷய்குமார், பரேஸ் ராவல், ராதிகா மதன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இப்படம் ஹிந்தியில் வருகிற ஜூலை 12ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் சூர்யாவும் இப்படத்தில் கெஸ்ட் ரோலுக்கு வருகிறார். அந்த வகையில் கிட்டத்தட்ட மூன்று காட்சிகளுக்கு வருகிறாராம். அது மட்டும் இல்லாமல் ஹிந்தியில் டப்பிங் வாய்ஸ் பண்ணி இருக்கிறாராம். ஏனென்றால் பாலிவுட்டிலும் சூர்யாவின் நடிப்புக்கும், குரலுக்கும் மயங்கிய ரசிகர்கள் இருக்கிறார்களாம்.

Also read: அக்கட தேசத்து நடிகருடன் ஓவர் நெருக்கம் காட்டும் சூர்யா.. அடடே பார்ப்பதற்குக் கூட ஒரே மாதிரி இருக்காங்களே!

அத்துடன் இப்படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா அவர்களுடைய தயாரிப்பு நிறுவனமான 2d என்டர்டைன்மென்ட் நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது. இவர்களுடன் கேஆப் குட் பிலிம்ஸ் நிறுவனமும் சேர்ந்திருக்கிறது. இப்படி சூரியா கொஞ்சம் கொஞ்சமாக பாலிவுட் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.

அது மட்டும் இல்லாமல் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகரான பாபி தியோல் இணைந்து நடித்திருக்கிறார். அத்துடன் இவர்கள் நெருங்கி பழகும் வாய்ப்பு பெற்றதால் தற்போது நண்பர்களாகவே இருவரும் மாறி விட்டார்கள்.

இதனை தொடர்ந்து சூர்யா, கங்குவா படத்தை முடித்த பிறகு வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தை நடிக்கப் போகிறார். ஆனால் வெற்றிமாறன் சரியா எந்த பதிலும் சொல்லவில்லை என்றால் அடுத்து உடனே பாலிவுட் படத்தில் நடிப்பதற்கு கமிட்டாக போகிறார். ஆக மொத்தத்தில் சூர்யாவை இனி தமிழ் படங்களில் மட்டும் இல்லாமல் பாலிவுட் படங்களிலும் பார்க்கலாம்.

Also read: வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு-ன்னு முடிவு பண்ணிய சூர்யா.. அந்தரத்தில் தொங்கும் வெற்றிமாறனின் வாடி வாசல்

Trending News