திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சூர்யாவுக்காக ரெண்டு தரமான சம்பவத்தை செய்ய போகும் லோகேஷ்.. ஹாலிவுட் அளவுக்கு எகிற போகும் மார்க்கெட்

Actor Suriya: தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கனாக பார்க்கப்படும் சூர்யா இப்போது வித்தியாச வித்தியாசமான கதை களத்தை கொண்ட படங்களில் நடித்து மற்ற நடிகர்களை விட தன்னை வேறுபடுத்தி காட்டிக் கொண்டிருக்கிறார். அதன் தொடர்ச்சியாக இப்போது சூர்யா, லோகேஷ் கனகராஜ் உடன் அடுத்தடுத்து இரண்டு சம்பவங்களை செய்யப் போகிறார்.

ஏற்கனவே சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா பத்து மொழிகளில் 3டி முறையில் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி பலரையும்வாய் அடிக்க வைத்தது. இதில் அசுர தனமாக இருக்கும் சூர்யாவை பார்க்கும் போதே வயிறு கலங்குகிறது. இதனால் இந்த படம் நிச்சயம் உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

Also Read: மும்பையில செட்டில் ஆயிட்டீங்களா என கேட்ட ரசிகர்.. சூர்யா சொன்ன பதில் என்ன தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகனின் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படமான விக்ரம் படத்தில் சில நிமிடங்கள் மட்டுமே சூர்யா ‘ரோலக்ஸ்’ என்ற கேரக்டரில் நடித்தார். ஆனால் இன்னமும் அந்த படத்தை நினைக்கும் போது ரோலக்ஸ் முகம் அனைவரின் கண்முன்னும் வந்து போகும்.

அந்த அளவிற்கு ரோலக்ஸ் ஆக சூர்யா மிரட்டி இருப்பார். இதனால் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே ரோலக்சை மட்டும் வைத்து லோகேஷ் புதிதாக ஒரு படத்தை எடுத்து திட்டமிட்டு இருக்கிறார். இதற்கு சூர்யாவும் ஒத்துக் கொண்டதால், வாடிவாசல் படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா படத்தையும் முடித்துவிட்டு லோகேஷ் – சூர்யா கூட்டணியில் ரோலக்ஸ் கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை எடுக்க போகின்றனர்.

Also Read: சூர்யாவிற்கு வரிசை கட்டி இருக்கும் அடுத்தடுத்த 4 படங்கள்.. தரமான சம்பவத்தை செய்ய போகும் ரோலக்ஸ்

அதோடு மட்டுமல்லாமல் இரும்புக் கை மாயாவி என்ற படத்தையும் லோகேஷ் இயக்கப் போகிறார். இதில் சூர்யாவின் பங்களிப்பும் முக்கியமாக இருக்கப் போகிறது. ஆகையால் அடுத்தடுத்து இரண்டு படங்களில் சூர்யா- லோகேஷ் இருவரும் இணையப் போகின்றனர். இந்த இரண்டு படங்களிலும் நிச்சயம் சூர்யாவின் வித்தியாசமான நடிப்பை பார்க்க வாய்ப்பு இருக்கிறது.

விக்ரம் படத்தில் சில நிமிடங்களில் சூர்யாவை அழகாக பயன்படுத்திய லோகேஷ் அடுத்ததாக இரண்டு படங்களில் சூர்யாவை மையமாக வைத்து எடுக்கப் போகிறார் என்பதை நினைக்கும் போதே ரசிகர்கள் பரவசமடைகின்றனர். அது மட்டுமல்ல இந்த படங்களால் நிச்சயம் சூர்யாவின் மார்க்கெட் ஹாலிவுட் அளவுக்கு எகிறுவது உறுதி.

Also Read: வணங்கான் சூர்யாவுடன் கூட்டணி போடும் அருண் விஜய்.. தெறிக்கவிடும் லேட்டஸ்ட் அப்டேட்

Trending News