சூரரைப் போற்று படத்திற்கு பிறகு தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வந்த சூர்யா தற்போது அடுத்தடுத்து தொடர் வெற்றி படங்களை கொடுக்க ஆயத்தமாகி வருகிறார். அந்த வகையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் படம் உருவாகி வருகிறது.
பாண்டிராஜ் இயக்கும் சூர்யா40 படத்தின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகின்றன. அதைத்தொடர்ந்து ஞானவேல் ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
பிறகு கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் எனம் படம் தொடங்க உள்ளது. இந்நிலையில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் கர்ணன் படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கலைப்புலி எஸ் தாணு சூர்யாவை தொடர்புகொண்டு மாரி செல்வராஜ் ஒரு கதை வைத்திருப்பதாகவும், அந்த படத்தில் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் எனவும் சூர்யாவிடம் ஒரு முன் பதிவைப் போட்டு வைத்துள்ளார்.

கர்ணன் படத்தின் பாராட்டு மழையில் நடந்து கொண்டிருக்கும் மாரி செல்வராஜுக்கு வாழ்த்து தெரிவிக்க சூர்யா போன் செய்து விரைவில் கதை கேட்க உள்ளதாகவும் ஒரு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.
இதனால் வெற்றிமாறன் படத்திற்கு முன்பே குறுகிய கால படமாக சூர்யா மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் ஒரு படம் உருவாக அதிக வாய்ப்பு இருப்பது போன்ற செய்திகள் கோலிவுட் வட்டாரங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.