சூரரைப் போற்று வெற்றிக்கு பிறகு அடுத்ததாக சூர்யா தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் சூர்யா 40 படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த சில மாதங்களாக கொரானா தொற்று காரணமாக ஓய்வில் இருந்த சூர்யா தற்போது மீண்டும் படப்பிடிப்பில் பங்கு பெற்றுள்ளார்.
சூர்யா தயாரித்த கடைக்குட்டி சிங்கம் என்ற படத்தின் மூலம் சூர்யாவின் மனதை கவர்ந்த இயக்குனராக மாறியவர் பாண்டிராஜ். அதேபோல் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குனராகவும் மாறிவிட்டாராம் பாண்டிராஜ். பாண்டிராஜ் இயக்கும் படங்கள் அனைத்துமே கமர்சியலாக வெற்றி பெறுவதால் கையோடு வைத்துக்கொண்டது சன் பிக்சர்ஸ்.
அந்த வகையில் தற்போது பாண்டிராஜ் சூர்யா 40 படத்தை இயக்கி வருகிறார். சூர்யா இல்லாமல் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. தற்போது உடல்நிலை சரியாகி மீண்டும் பழைய புத்துணர்ச்சியுடன் சூர்யா40 படத்தில் கலந்து கொண்டுள்ளார் சூர்யா.
முதலில் கையில் துப்பாக்கி வைத்திருப்பது போல வெளியான போஸ்டரை தொடர்ந்து தற்போது தனுஷின் கர்ணன் ஸ்டைலில் கையில் வாலை வைத்துக்கொண்டு நடந்து செல்லும் சூர்யாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதுவரை சூர்யா இந்த மாதிரி முதல்நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது அதன் புகைப்படங்களை வெளியிட்டதில்லை. இதன் காரணமாகவே இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. உடல்நிலை சரியானதற்கு பிறகு நடிக்கும் முதல் படம் என்பதால் கூடுதல் சந்தோசத்தில் உள்ளாராம்.
சூர்யா40 திரைப்படம் ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு தயாராகி வருகிறது. சூர்யா மற்றும் பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகும் படம் கண்டிப்பாக சூர்யாவின் சினிமா மார்க்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.