3 Mass Look Of Suriya: சூர்யாவின் கங்குவா இப்போது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்துக்காக சூர்யா மாதக்கணக்கில் ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் அவருடைய பிறந்தநாள் அன்று வெளியான வீடியோ கூட படு மிரட்டலாக அமைந்தது.
அதைத்தொடர்ந்து கங்குவாவின் அவதாரத்தை காண ஒட்டுமொத்த ரசிகர்களும் இப்போது பேரார்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த சூழ்நிலையில் இப்படத்திற்காக சூர்யா எந்த அளவுக்கு தன் தோற்றத்தை மாற்றிக் கொண்டார் என்ற போட்டோ வெளியாகி இருக்கிறது.
Also read: ராஜமவுலியை ஓவர்டேக் செய்யும் சிறுத்தை சிவா.. கங்குவாவில் உள்ள மாஸ் சம்பவம்
ஏற்கனவே அவ்வப்போது இவர் உடற்பயிற்சி செய்து உடம்பை ஃபிட்டாக வைத்திருக்கும் போட்டோக்கள் மீடியாவில் வெளியாகி வரும். ஆனால் தற்போது ஆறு மாதத்தில் அவர் மூன்று வெரைட்டி காட்டி இருக்கும் போட்டோக்கள் செம மாசாக அமைந்துள்ளது.
அந்த வகையில் கடந்த மே மாதம் இப்படத்திற்காக சூர்யா தன்னுடைய உடல் எடையை கொஞ்சம் அதிகப்படுத்தி இருந்தார். அதை அடுத்து ஆகஸ்ட் மாதம் சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் காட்சி அளித்தார். அடுத்தபடியாக இந்த நவம்பர் மாதத்தில் அவர் எடையை குறைத்து அட்டகாசமாக இருக்கிறார்.
இதிலிருந்தே அவர் இப்படத்திற்காக எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த வகையில் மிகப்பெரும் சாதனையை செய்ய வரும் கங்குவா ஒவ்வொரு நாளும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிக்கொண்டே இருக்கிறது.
கங்குவாவுக்காக ரிஸ்க் எடுக்கும் சூர்யாவின் 3 மாஸ் லுக்
